[வேலைப்பளுவின் காரணமாக நீண்ட நாட்களாக பகிர்வுகளை வெளியிட
முடியாமல் போனதற்காக 'என்ன...எதுவென்று...?! ' ஒருவரும்
கேட்ட்கவில்லைஎன்றாலும் :-) , நண்பர் ரோம் நகர் செல்வராஜிடம் நான்
மன்னிப்புக் கேட்டே ஆகவேண்டும்! நண்பரே... நலமா?]
இந்தமுறை பகிரப்போவது 2002 இல் வெளிவந்த, 'இந்தியா : புலிகளின்
இராட்சியம் !' (India: The Kingdom of Tigers!) என்ற ஆவணப்படம். சும்மா
கேட்டாலே அதிரும்படியானத் தலைப்பு இல்லே ....! நானாக வைக்கவில்லை,
தானாக அமைந்துள்ளது!
ஜிம் கார்பெட் ! இந்தியப் புலிகளுக்கு வேலியாக மாறிய வேட்டைக்காரன்!
அவர் எழுதிய ' Man-Eaters of Kumaon' என்ற புத்தகத்தை அடிப்படையாகக்
கொண்டு படைக்கப்பட்ட ஒரு அருமையான காணொளி. அவர் பிறந்து
வளர்ந்த இமய மலைச்சாரலில் உள்ள குமாவுன் பளைப் பிரதேசங்களில் 1900
முதல் 1930 வரை வாழ்ந்த மனிதர்களை கொன்று தின்ற புலிகளையும்
சிறுத்தைகளையும் வேட்டையாடிக் கொன்ற அவரின் அனுபவங்களைப்
பற்றிய புத்தகம். இந்தப் புத்தகத்தில் புலிகளைப் பற்றி மட்டுமல்லாமல்,
அந்தக்கால இந்தய வாழிக்கை முறையைப் பற்றியும், இந்திய
கிராமங்களைப்பற்றியும் அழகாக எடுத்துக் கூறியுள்ளார். நாம் காணப்போகும்
இந்த காணொளியிலும் இவைகள் எல்லாம் அருமையாகத்
தெளிக்கப்பட்டுள்ளது.
அவரைப்பற்றி மேலும் படிக்க சில சுவாரசியமான பக்ககங்கள்... இங்கே ,
1936 ஆண்டு ஜிம் கார்பெட் முயற்ச்சியால் தொடங்கப்பட்ட இந்தியாவின்
முதல் தேசியப்பூங்காவான ஹெய்லி தேசியப்பூங்கா, பின்பு ராம்கங்கா
தேசியப்பூங்கா என்று பெயர்மாறி, கடைசியாக 1957 இல் ஜிம் கார்பெட்
தேசியப்பூங்கா என்று அழைக்கப்பட்டு அவருக்கு கவுரவம் செய்யப்பட்டது.
இந்தப் படத்தை இயக்கியவர் Bruce Neibaur. இசை அமைத்தவர் Michael Brook
இந்தப் படத்திற்கான இசையைக் கேட்க அவரின் இசைத்தளத்திற்கு
செல்லவும்.
IMAX இல் இவர்கள் அளித்துள்ள இந்தப் படைப்பு என்னைக் கவர்ந்ததுப்போல உங்களையும் கவரும் என்பதில் ஐயமில்லை!
விடியோவை 720p HD செலக்ட் செய்துக்கொண்டு பார்க்கவும்.....
மீண்டும் சந்திப்போம்....