திங்கள், 17 டிசம்பர், 2012

21.12.2012 உலக அழிவு பற்றி நாசாவும், சில நேரலைக் கேமராக்களும்...!


வருகின்ற 21.12.2012 அன்று, நமது உலகம் அழியப்போகிறது என்கிற கூற்று நடக்கப் போகிறது இல்லையோ... அது சம்மந்தமாக கேள்விப்பட்டு, சுய நினைவோடு இருப்பவர்களுக்குள்ளே ஒரு சிறியத் தாக்கதையாவது ஏற்படுத்தி இருக்கும் எனபது மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாத உண்மை.

21 ஆம் தேதி நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், நாசா நிறுவனம், வரும் 22.12/12 அன்று வெளியிடப்படவேண்டிய ஒரு காணொளியை, பத்து நாட்களுக்கு முன்பே வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார்கள்! அது உங்களின் பார்வைக்கு...



அந்த 21 ஆம் தேதி Winter Solstice எனப்படும் கதிர் மண்டலத் திருப்புமுகம். நம்ம ஊர்ல ' மகர சங்கராந்தி' என்றுக் கூறுவார்களே அதேதான்.

இவைகளைப்பற்றி உலகின் அறிவியல் ' அத்தாரிட்டி'யாகத் திகழும் நாசா நிறுவனம் கூறுவது என்ன என்பதை இந்த லிங்க்குகளில் சென்றுப் பார்க்கலாம்....

 Beyond 2012: Why the World Won't End



மேலும் இதைப்பற்றிய நாசா விஞ்ஞானிகளின் ஒரு கலந்துரையாடல் ...




                                                                *****

என்னதான் சொன்னாலும் உலகம் முழுவதும் ஒரு வித பயம் கலந்த பரபரப்பு காணப்படுகிறது. ஏதாவது நடக்குமா என்ற எதிர்ப்பார்ப்பில் இருப்பவர்களுக்காக உலகிலுள்ள சில நேரலை கேமராக்களை பரிந்துரை செய்துள்ளன சில வலைத்தளங்கள். அவற்றில் சில...

அமெரிக்காவின் ஹன்ட்ஸ்வில்லியில் உள்ள மார்ஷல் விண்வெளி நிலையத்தில் வான மண்டலத்தை நோக்கிப் பொருத்தப்பட்டுள்ள கேமரா...



நியூ யார்க் நகரின் வானளாவிய கட்டிடங்களை காட்டும் நேரலைக் கேமரா...



ஆப்ரிக்காவின் போட்ஸ்வானா நாட்டிலுள்ள ' மஷாட்டு விலங்குகள் சரணாலயத்திலுள்ள 'பெட்ஸ் பாண்ட் ' என்ற குலத்தைக் காட்டும் நேரலைக் கேமரா... 




அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள சான்டா க்ருஸ் கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை நோக்கிப் பொருத்தப்பட்டுள்ள நேரலைக் கேமரா...




அமெரிக்காவின் கொலரெடொ மாகாணத்தின் க்ரிலே நகரில், ராக்கி மலைகளை நோக்கிப் பொருத்தப்பட்டுள்ள நேரலைக் கேமரா...





கடைசீயா (?!) ஒரு ஜோக்...


சரி நண்பர்களே... மீண்டும் 22.12.2012 அன்று சந்திப்போம். Best of Luck...!

புதன், 3 அக்டோபர், 2012

பிளாஸ்டிக் அடிமைகள்


ஆம். அடிமைகள்தான்...! பிளாஸ்டிக் அடிமைகளாகத்தான் மாறிப்போயிருக்கிறோம் . நம் வாழ்வில் சர்வ சாதாரணமாக கலந்துவிட்ட இந்த நச்சுப்பொருளை நம்பியே வாழவேண்டி இருப்பதால், சத்தியமாக நாம் பிளாஸ்டிக்  அடிமைகள்தான்.

என்னதான் மறுசுழற்சி செய்யப்பட்டாலும் மனித இனத்துக்கே எமனாக மாறப் போகிறது இந்த பிளாஸ்டிக். சமீபத்தில் நான் பார்த்த, படித்த சில விஷயங்களை உங்களோடுப் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். ' Addicted to Plastic ' என்ற ஆவணப்படம், பிளாஸ்டிக் பற்றிய உண்மைகளையும், அதற்கு எதிரான ஒரு உலகம் தழுவிய இயக்கத்தை நடத்தும் மனிதர்களையும் அறிமுகம் செய்துவைக்கிறது. ஐந்துக் கண்டங்களில், பன்னிரண்டு நாடுகளில் படமாக்கப்பட்டது  மாத்திரமல்லாது, பசிபிக் பெருங்கடலின் நடுவே சுழலும் மாபெரும் பிளாஸ்டிக் குப்பைத்தீவை கண்முன் காட்டுகிறது.










பசிபிக் பெருங்கடலில் மிதக்கும் பிரம்மாண்ட பிளாஸ்டிக் குப்பைத்தீவைப் பற்றிய சில வலைப்பக்கங்கள்.

http://www.sfgate.com/green/article/Continent-size-toxic-stew-of-plastic-trash-2518237.php

http://www.latimes.com/news/la-me-ocean2aug02,0,4917201.story

http://www.mindfully.org/Plastic/Ocean/Pacific-Garbage-Patch27oct02.htm

http://science.howstuffworks.com/environmental/earth/oceanography/great-pacific-garbage-patch.htm

http://www.sfgate.com/news/article/Feds-want-to-survey-possibly-clean-up-vast-3301752.php

http://science.howstuffworks.com/environmental/earth/oceanography/great-pacific-garbage-patch.htm

http://www.mnn.com/earth-matters/translating-uncle-sam/stories/what-is-the-great-pacific-ocean-garbage-patch

மேலும் அதைப்பற்றிய ஆவணப்படமான ' Garbage Island '



சனி, 15 செப்டம்பர், 2012

பாம்புகளும் அழகுதான்...!


[ நண்பர், இத்தாலி. ரோம் நகர் திரு செல்வராஜ் அவர்களே, என்னை தயவு செய்து milkeywayman@gmail.com அல்லது amburedwin/prabanjapriyan என்ற முகநூல் முகவரியின் மூலமாக தொடர்புக் கொள்ளவும்... அல்லது உங்களின் மின்னஞ்சல் முகவரியைப் பின்னூட்டமிடவும். நன்றி. ]

என்னத்தான் ஃபேஸ் புக் இருப்பதால், பதிவுகள் போட நேரமில்லாமல் போனாலும்.. பிளாக்கர் மூலம் பதிவிடுவது என்பது எப்போதுமே சிறந்தது.

மேன்செஸ்டர் அருங்காட்சியகத்தில் நான் எடுத்தப் புகைப்படம்....  


அதென்னவோ பாம்புகள் எப்போதுமே என்னை வசீகரிக்கும் ஜீவன்களாயுள்ளன. பாம்பிகள் பற்றி நிறைய பகிர்ந்து இருந்தாலும், புதியதாக ஏதாவது கிடைத்தால், உடனே உங்களிடம் பகிர மனம் விரைகிறது. அதனால்தான் இந்தப் பதிவு.... என்னில் கவர்ந்த இந்தக் காணொளி உங்களையும் கவரும் எனபது திண்ணம்.





வெள்ளி, 20 ஜூலை, 2012

எறும்புகள் : இயற்கையின் ரகசிய ஆற்றல்


எறும்புக்கும் தாகமுண்டு... 

இந்த உலகிலே எந்த உயிரினம் சாகாவரம் பெற்றது... எந்த உயிரினம் போரார்வம்மிக்கது... எந்த உயிரினம் மிகச்சிறந்த கட்டுமான அமைப்பைக்கொண்ட நகரத்தைப் பெற்றுள்ளது...! மனித இனமென்றால் அது தவறு...! நம் காலுக்கடியில் அற்ப்பமாகச் சுற்றித்திரியும் எறும்புகள்தான்  என்றால் நம்மில் பலரும் நம்பப்போவதில்லை...!

எறும்புகளின் சிறிய உருவமும், நம்முடைய வெற்றாரவாரமும்தான் நம்மையே நித பூமிக் கிரகத்தின் மேலான உயிரினம் என்ற மாயையை உருவாக்கியுள்ளது. ஆனால் நிஜத்தில் இந்த உலகத்தை ஆள்வது எறும்புகள்தான்






ஹெவிவெயிட் சேம்பியன்...! 

எறும்புகளைப் பற்றிய எனக்குப் பிடித்த சிலப் பழமொழிகள்...

An ant is over six feet tall when measured by its own foot-rule.
An ant on the move does more than a dozing ox.
An ant's nest could bring down a hill.
Ants can attack with a grain of rice.
Ants live safely till they have gotten wings.
Ants never lend, ants never borrow.
Better an ant's head than a lion's tail.
Even an ant can hurt an elephant.


நாம் காணப்போகும் காணொளியில், பெர்ட் ஹோயல்டோப்லேர் (Bert Hoelldobler) என்ற உலக பிரசித்திப்பெற்ற எறும்புகளின் ஆராய்ச்சியாளரின் பார்வையில், அந்த சின்னஞ்சிறு உடலைக்கொண்ட ஒரு மகத்தான உயிரினத்தைப் பற்றிக் காணப்போகிறோம்.

இந்தக் காணொளி பெற்ற அங்கீகாரங்கள்....

Winner of International Wildlife Film Festival Missoula (USA)
"Best TV-Program" and "Best Educational Value" & NaturVision 2005: 
Best International Contribution / Best Camera 









செவ்வாய், 15 மே, 2012

காகங்கள்....



நாம் அன்றாடம் பார்க்கும், நம்ம வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த  காகங்கள் பற்றி நமக்குத்தான் அதிகம் தெரியாதே ஒழிய, அவைகளுக்கு நம்மைப்பற்றியும், நம் பழக்கவழக்கங்கள் பற்றியும், நம் போக்குவரத்து மட்டும் நம் உணவுப்பழக்கங்கள் பற்றியும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றன.
காகங்கள்தான் இந்த பூவுலகிலேயே மிகவும் பரவலாகக் காணப்படும் பறவை. பார்ப்பதற்கு உருவத்தில் சிறியதாகத் தென்பட்டாலும் அறிவுக்கூர்மையில் நாமே பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளத்தக்க ஆற்றல் கொண்டவைகள்.
பல சுவாரசியமான , வியக்கவைக்கும் தகவல்கள் அடங்கிய காணொளிகளைத்தான் நாம் காணப்போகிறோம்....

மேலும் காகங்களைப் பற்றி அறிய  ... இங்கே மற்றும் இங்கே 

காகங்கள் நம்மை விட சாமார்த்திய சாலிகளா...? எப்படி !

மேலும் தெரிந்துக்கொள்ள RSPB's  'காகங்களின் பக்கம் '

காகங்களை பற்றிய சில காணொளிகள்...




\


இதோ மிஸ் பண்ணவேக்கூடாத ' A Murder of Crows ' என்ற காணொளி...








திங்கள், 19 மார்ச், 2012

சூரியப் புயல்.


ஏற்கனவே நாம் கொஞ்ச நாளைக்கு முன் பார்த்த விஷயம் தான்...'சூரிய சுனாமி' என்றப் பெயரில்! இந்த முறை அதே ஆபத்தைப் பற்றி மறுபடியும் ஒருப் பதிவு. சென்றப் பதிவுக்கும் இந்தப் பதிவுக்கும் இடையே ஆனா நாட்களில், உலகம் இன்னும் கொஞ்சம் சீரியசாகக் கவலைப்பட ஆரம்பித்து உள்ளது.

தற்போதுள்ள வளைகுடாப் பிரச்சனைகள், உலக பொருளாதார வீழ்ச்சி, பல்லாயிரம் அப்பாவித் தமிழர்களைக் கொன்ற கொலைக்காரப்  போர்க்குற்றவாளிகளை தண்டனைக்குள்ளக்கும், உலகின் சிறிதளவேனும் மிந்த நேயம் மிஞ்சியுள்ள நாடுகளின் துரித முயற்சி, உலக வெப்பமயமாதல் போன்ற பல முக்கியமான பிரச்சனைகளுக்கு மத்தியில், மிகப் பெரும் தொழில்நுட்ட்பப்  அச்சுறுத்தலாக உருவாகி வருகிறது!



நம்மையெல்லாம் காத்துவரும், நம் அண்டை நட்சத்திரமான சூரியனே நமக்கு மிகப் பாதகமானச் செயலை செய்யலாம் என்ற அச்சம் உலக மக்களை உலுக்கிவருகிறது! இதை எவ்வளவு கடுமையான அச்சுறுத்தலாக கொள்ளவேண்டும் எனபது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

வலையில் உலாவும்போது ' SOLAR STORM WARNING ' என்ற வலைத்தளத்தை காண நேர்ந்தது. அதில் உள்ள கருத்துக்கள் ஏதோ மக்களை பயமுறுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகத் தோன்றினாலும், அதிலுள்ள பல விஷயங்கள் விஞ்ஞான உண்மைகளாகவேத் தென்படுகிறது. அதை நீங்களும் காண இங்கே....


நமது முந்தைய பதிவான ' சூரிய சுனாமி 'யிலும் நிறைய செய்திகள் சிதறியுள்ளன... அதைக் காண இங்கே

சமீபத்தில் நான் பார்த்த பிபிசியின் ' Solar Storms - The Threat to Planet Earth ' காணொளி, இந்த ஆபத்தைப் பற்றி மிகத் தெளிவாக அலசியுள்ளது. அதையும் உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுகிறேன்...



Solar Storms: The Threat to Planet Earth by silichip

புதன், 15 பிப்ரவரி, 2012

'Earthflight' இல் பறக்கலாம் வாங்க...!



சமீபத்தில் பிபிசியில்  நான் பார்த்து மிகவும் ரசித்து வியந்தத் தொடர்க் காணொளி... 'Earthflight' என்ற அருமையான ஆவணப்படம். ஜான் டவ்னர் [John Downer] தயாரிப்பில், நடிகர் டேவிட் டெனன்ட் [David Tennant] வர்ணனையில், பிபிசி நிறுவனம் வழங்கிய உள்ளத்தைக் கொள்ளைக்கொள்ளும் விருந்தை நாம் அனைவரும் பகிந்துக்கொள்ளலாம்!
பொதுவாக நம் அனைவருக்கும் சிறுவயது முதல் ஒருப் பறவையைப்போல் பறக்கவேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருந்திருக்கவே வேண்டும். வழக்கம்போல,பிபிசி இந்தப் படத்தின் மூலம் நம்மை ஒரு பறவையின் பார்வையோடு, பல நாடுகளையும், கண்டங்களையும், பறவைகளோடு பறவையாக நாம் பறந்துக் கடக்கப்பன்னியுள்ளது என்றால் அது மிகையல்ல !

ஆறு பகுதிகளாக உள்ள இந்தத் தொடர்க்காணொளி வட அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் ஆசியா & ஆஸ்திரேலியா போன்ற தலைப்புகளில், அந்தந்தக் கண்டங்களைச் சேர்ந்தப் பறவைகள் எப்படி கண்டம் விட்டு கண்டம் புலம்பெயர்கின்றன என்பதை, நவீன தொழில்நுட்ப கேமரா மற்றும் கருவிகளைக்கொண்டு, ஏதோ நாமும் அவைகளோடு பறந்துச் செல்வதைப் போன்ற பிரம்மையை ஏற்படுத்தியுள்ளார்கள். இந்தப்படங்களைப் பார்த்தால் பறவைகளைப்பற்றிய நம்முடைய எண்ணமும் மரியாதையும் நிச்சயம் அதிகரிக்கும் என்பது உறுதி... அவைகள் நம் தோட்டத்தில் இருந்தாலும் சரி... நம் டைனிங் டேபிள் மீது இருந்தாலும் சரி!


ஒன்றுவிடாமல் பாருங்க... கடைசியில் வரும் காணொளியில், இந்தத் தொடரை எடுக்க எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்கள் என்றும்  இந்த காணொளிகளின்  பின்னே எவ்வளவு உழைப்பு உள்ளது என்பதையும் நாம் அறிய முடியும். Hats off to you guys!  Thank you BBC...!  

முதலில் ட்ரைலர்...




வட அமெரிக்கா...






ஆப்ரிக்கா...





ஐரோப்பா...





தென் அமெரிக்கா...





ஆசியா & ஆஸ்திரேலியா...





காட்சிகளின் பின்னே...



 
இவர்கள் இதற்குமுன் தயாரித்த 'Polar Bear - Spy on the Ice' படப்பிடிப்பில் நடந்த தமாஷ்!

புதன், 25 ஜனவரி, 2012

என்றென்றும் ராஜா !



சில விஷயங்கள் அபூர்வமாகத்தான் நிகழும் ... குறிஞ்சிப்பூ பூப்பதைப்போல! இசை ஞானியின் நேரடி இசை நிகழ்ச்சியும் அதுப்போலத்தான்.  நிகழ்ந்தேவிட்டது! எத்தனைக்கோடித் தமிழர்களின் கனவாக இருந்தது... நனவாக,நிஜமாக மாறியேவிட்டது! இசை ஞானியின் வாழ்வில் சமீபத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்வான அவரின் துணைவியார் திருமதி. ஜீவா அவர்களின் மறைவுக்குப் பிறகு அவர் பங்குபெற்ற இசை நிகழ்ச்சி என்பதால்,மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக எதிர்ப்பார்கப்பட்டது. ( 'ஒரு ஜீவன் அழைத்தது' பாடலின் இடையே அவர் தன் கண்ணீரை துடைத்துக்கொண்டபோது, நம் நெஞ்சம் கனக்கிறது.)

ஜெயா டிவி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு, உலகத்தமிழர்களிடம் மீண்டும் ஒருமுறை கரகோஷத்தை பெற்றுள்ளது. உலக இசைஞானி ரசிகர்களின் சார்பாக, இந்த பகிர்வின் மூலமாக ஜெயா டிவி நிர்வாகத்துக்கு நமது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகிறோம். 

இப்போது நீங்கள் பார்க்கப்போது,ஜெயா டிவியின் 'என்றென்றும் ராஜா ' நிகழ்ச்சித் தொகுப்பை... எந்த விளம்பர தடங்கலுமில்லாமல்... யூ டியூப் வாயிலாக... இரண்டேப் பகுதிகளாக... நல்ல HD தரத்துடன்...!(அப்லோட் பண்ண நண்பருக்கு கோடி வணக்கங்கள்!) சுத்தத் தங்கத்துக்கு, சர்டிபிகேட் எதற்கு...?! வயலின்கள், செலோக்கள், கிட்டார்கள், கீ போர்டுகள், புல்லாங்குழல்கள், தபேலாக்கள், மிருதங்கங்கங்கள், மேளம், ஷேனாய்கள், டிரம்பெட்டுகள், ட்ரம்சுகள் போன்ற 'நிஜ' இசைக்கருவிகளின் மத்தியிலும், ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த மேற்க்கத்திய இசைக்கலைஞர்களுடன் நம்ம  ஐயா பாலமுரளி, எஸ்.பி.பி., கே.ஜே.ஜே., சித்ரா, ஹரிஹரன்,உமா ரமணன், தீபன்  போன்ற ஜாம்பவான்களின் இடையே, நம் இசைஞானியோடு கைக்கோர்த்து உலாவரலாம்...! வாங்க...! 










போதும்...
ஸ்டார்ட் ம்யூஸிக் !
[460p resolution இல் வைத்து பாருங்கள் நண்பர்களே...!] 





இதில் இன்னொரு கடைசி பாகமும் உள்ளது... நல்ல தரத்துடன் 


தேடிக்கொண்டிரும்தேன்... கிடைத்தது அதே நண்பர் மூலமாக.... ஆனால் கொஞ்ச 


குறைந்த தரத்தில்....ஆனால் நிகழ்ச்சியின் தரம் கடந்த இரண்டு பாகங்களைவிட இந்தப் 


பாகத்தில் அதிகம்... நீங்களேப் பாருங்க...!