Snakes லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Snakes லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 செப்டம்பர், 2012

பாம்புகளும் அழகுதான்...!


[ நண்பர், இத்தாலி. ரோம் நகர் திரு செல்வராஜ் அவர்களே, என்னை தயவு செய்து milkeywayman@gmail.com அல்லது amburedwin/prabanjapriyan என்ற முகநூல் முகவரியின் மூலமாக தொடர்புக் கொள்ளவும்... அல்லது உங்களின் மின்னஞ்சல் முகவரியைப் பின்னூட்டமிடவும். நன்றி. ]

என்னத்தான் ஃபேஸ் புக் இருப்பதால், பதிவுகள் போட நேரமில்லாமல் போனாலும்.. பிளாக்கர் மூலம் பதிவிடுவது என்பது எப்போதுமே சிறந்தது.

மேன்செஸ்டர் அருங்காட்சியகத்தில் நான் எடுத்தப் புகைப்படம்....  


அதென்னவோ பாம்புகள் எப்போதுமே என்னை வசீகரிக்கும் ஜீவன்களாயுள்ளன. பாம்பிகள் பற்றி நிறைய பகிர்ந்து இருந்தாலும், புதியதாக ஏதாவது கிடைத்தால், உடனே உங்களிடம் பகிர மனம் விரைகிறது. அதனால்தான் இந்தப் பதிவு.... என்னில் கவர்ந்த இந்தக் காணொளி உங்களையும் கவரும் எனபது திண்ணம்.





செவ்வாய், 10 மே, 2011

பாம்புகள் பலவிதம்:(3) ராஜ நாகத்தைத் தேடி....!


முந்தையப் பதிவுகளைப் பார்க்கத் தவறியவர்களுக்கு....


ஆஸ்டின் ஜேம்ஸ் ஸ்டீவன்ஸ்! பன்ச் டயலாக் பேசி, நம்ம ரசனையைக் கேலிப்பொருளாக்கி, மக்களின் மனதை மாசுப்படுத்திவரும், நம்மவூர் பம்மாத்து ஹீரோக்கள் போலில்லாமல், நிஜமாகவே ஹீரோவாக மதிக்கப்படவேண்டியவர்களில், மறைந்த 'ஸ்டீவ் இர்வின்' போன்று, உலகில் ஒரு சிலரில் இவரும் ஒருவர். அவரைப் பற்றி தெரிந்துக்கொள்ள, இங்கே....  மற்றும் இங்கேயும்...

நம்ம 'பாம்புகள் பலவிதம்' பதிவுகள் வரிசையில் கண்டிப்பாக சேர்க்கப்படவேண்டிய காணொளிகளில் ' In Search of the King Cobra 'வும் ஒன்று. இதில் ஆஸ்டின் ராஜ நாகத்தை தேடி வருவது நம்மவூர்ப் பக்கம். இந்த தேடுதல் வேட்டையில், அவரின் வாழ்நாள் கனவுகளில் ஒன்றை நிறைவேற்றிக்கொண்டார்! அது என்னத்தெரியுமா...? ராஜ நாகம் படமெடுத்தாடும்போது, அதன் தலைமீதுக் கைவைப்பது! 
அவரின் மேலும் சில வீடியோ கிளிப்பிங்குகள் 'Animal Planet' தளத்தில்....

நாம் ராஜ நாகத்தைப்பற்றி 'கிங் கோப்ரா = ராஜ நாகம் = டெரர் !' என்றப்பதிவில் பார்த்துவிட்டதால், நேராக படப் பார்க்க செல்லலாம் வாங்க.

திங்கள், 21 மார்ச், 2011

பாம்புகள் பலவிதம் (2) - நாகம்: பாம்புகளின் அரசன்.



நாகப்பாம்பு...! சும்மா பேரைக்கேட்டாலே (நிஜமாகவே) அதுருதில்ல! ஆமாங்க, 'நல்லப்பாம்பு' என்றப் புனைப்பெயரிலும் வலம்வரும் இவைகளைப் பார்க்கவேவேண்டாம்... பெயரைக்கேட்டாலே உடல் சிலிர்த்துக்கொள்ளும்!
மனிதன் உண்மையிலேயே பய பக்தியோடு கும்பிடும் ஒரே தெய்வம், இதுத்தான்! 'Cobras: King of Snakes' அருமையான என்ற வீடியோவைப் பார்க்கும்முன்  இவைகளைப்பற்றி தெரிந்த, தெரியாத சிலப்பல தகவல்கள்.

வெப்ப நாடுகளில் வாழும் இவைகளில், ஏறக்குறைய 270 வகைகள் உண்டாம் !

Class: Reptilia
Order: Serpentes
Family: Elapidae
Diet: Lizards, Fish, Frogs and other Snakes
Natural Habitat: Warm-climate habitat, usually inhabiting on land, trees and also in water
Age: About 20 years
Gestation Period: 60-80 days (depending on the specie)
Number of Eggs: 20 - 40 

இந்த நாகக்குடும்பத்திலேயே மிகப்பெரியதும்,ரொம்ப விசேஷமானதுமாகக் கருதப்படுவது நம்ம ஊர் 'ராஜநாகம்'தான்! இவைகளை சந்திக்க இங்கே செல்லவும். 


அட்டகாசமான 'இரவுப்பார்வை' கொண்ட இவைகள், தங்களின் பிளவுப்பட்ட நாக்கின் உதவியால் பலதரப்பட்ட வாசனைகளை மிகத்துல்லியமாக உணரக்கூடியவை.  தங்களின் அருகே நிலவும் மிகச்சிறிய வெப்பநிலை மாற்றங்களை உணரக்கூடியவை! 


அவை சீற்றம் கொண்டாலோ,சும்மா பயமுறுத்தவோ, நம்ம ஊரில் கூறப்படுவதுபோல் 'படமெடுத்து ' ஆடும்! நம்ம பாம்பாட்டிகள் ஊதும் மகுடி, உண்மையில் அவைகளுக்காக அல்ல... நமக்காக! அவைகளுக்கு இந்தக்காட்சிகள் 'ஆடியோ இல்லாத விடியோவாகத்தான்' தெரியும்! ஏனென்றால் அவைகளுக்கு காது, கேட்-காது! [அடுத்தமுறை யாராவது பாம்பாட்டி மகுடி ஊதினால், நமக்கு பிடித்த பாடலை வாசிக்கச் சொல்லவேண்டும் ]
அவைகளின் பின்னால் இருக்கும் கண்கள் போன்ற படம், உண்மையில் அவைகள் தன்னைத்தானே பெரிதாகக் காட்டிக்கொள்ள உதவும் ஒரு illusion!... சில பட்டாம்பூச்சிகளின் இறக்கைகளில் உள்ள டிசைன் போல. 


இந்தியாவுக்கு ' The land of Snake Charmers ' என்றப் பெயர் இருப்பது நம்மில் எத்தனைப்பேருக்குத் தெரியும்? 









இன்னும் அப்படி யாராவதுச் சொனால் அவர்களை இங்கே தள்ளிவிடுங்கள்!

இதைப் படிக்கச் சொல்லுங்கள்....

முடிந்தால் இங்கேயும்போய் நீங்களும் ஒரு கலக்கு கலக்குங்க...


ஞாயிறு, 13 மார்ச், 2011

பாம்புகள் பலவிதம் - (1) அனகோண்டா !



" பாம்புகள் பலவிதம்". இது ஒரு தொடர்ப் பதிவு! ஒவ்வொருப் பதிவும், ஒவ்வொரு விதமானப் பாம்புகளைப் பற்றியது..... அதுவும் நம்ம தளத்திற்கே உரிய சிறப்பம்சமான, அருமையான வீடியோவுடன்!  ஏற்கனவே கிங் கோப்ரா = ராஜ நாகம் = டெரர் ! என்றப் பதிவைப் பார்த்துள்ளோம்.

'அனகோண்டா'!  உலகின் மிகப்பெரிய பாம்பு. ஜெனிபர்  லோபஸ் நடித்த திரைப்படத்தின் மூலமாக மேலும் புகழடைந்தப் பாம்பு!
"மின்னல் தண்டு" அல்லது " சாட்டைப் பாம்பு " என்று அர்த்தப்படும் 'ஹெனக்கான்டையா' (henacandaya) எனும் சிங்கள மொழிச் சொல்லின் இலத்தீன் மொழியாக்கம்தான் அனகோண்டா என்றும், நம்ம தமிழ் மொழியின் 'ஆனைக்கொண்டான்' (யானையையேக் கொல்லக்கூடிய) என்ற சொல் மறுவி, அனகோண்டா என்று ஆகியது என்றும் அதன் பெயரின் பூர்வீகம் பற்றிக் கூறுகின்றனர்.  

ஏறக்குறைய மலைப்பாம்பும் அனகோண்டாவைப் போல பெரியது என்றாலும், அனகோண்டாவின் உடல் சுற்றளவும், அதன் அட்டகாசமான தசைக்கட்டும், அதனை மலைப்பாம்பை விட கொஞ்சம் உயரத்தில் நிறுத்திவிடுகிறது.

பொலிவியன் அனகோண்டா, கரும்புள்ளி அனகோண்டா, பச்சை அனகோண்டா மற்றும் மஞ்சள் அனகோண்டா என நான்கு வகை அன்கொண்டாக்கள் உள்ளன. பச்சை அனகொண்டாக்கள் தான் மிகப்பெரியவை. எடை சுமார் 227 kg, நீளம் சுமார் 30 அடி!
பலவகை விலங்குகளை உண்ணும் இவை, ஒரே நாளில் 40 பவுண்ட் உணவை உண்ணுமாம்! முதலும் தான் பிடித்த விலங்கை சுற்றி வளைத்து, இறுக்கி, எலும்புகள் நொறுங்குமாறு பிழிந்து, அப்படியே ஸ்வாஹா செய்யுமாம்! அதன் வயிற்றில் சுரக்கும் ஒருவித 'நொதி/என்சைம்', அதை ஜீரணிக்க செய்யுமாம். இது நடக்க ஒரு வாரக் காலம் கூட ஆகும் ! ஒரு பெரிய விருந்து கிடைத்துவிட்டால், ஒரு வருடம் கூட எதுவும் உண்ணாமல் இருக்க முடியும் இவைகளால்!

 எப்போது நிலையான நீர்நிலைகளில் இருக்கும் இவை, அதிகப்பட்சம் பத்து நிமிடங்கள் மட்டுமே நீருக்குள் இருக்க முடியும். மட்ட்றபடி  தலையை மட்டும் நீருக்கு வெளியே வைத்துக்கொண்டு இருக்கும். சில நேரங்களில் மரங்களின் மேலும் ஏறி விடுமாம்!

அனகொண்டாக்கள் தம் வாழ்நாள் முழுவதும் வளர்ந்துக்கொண்டே இருக்குமாம்.

பெண் அனகொண்டாக்கள், ஆண் அனகொண்டாக்களைவிட அளவில் பெரியவை. (வழக்கம் போல!)

முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்கு பதிலாக, குட்டிகளாகவே வெளிவரும்..பிறக்கும்போதே இரண்டு அடி நீளமுள்ள இவைகள், அப்போதே நீந்தவும், வேட்டையாடவும் தொடங்கி விடுகின்றன.

உலகில் இவை இருப்பது தென் அமெரிக்காவின் அமேசான் காடுகளில்.

சினிமாக்களைத் தவிர, இவைகள் மனிதனுக்கு தீங்கு இழைப்பதில்லை. உண்மையில் மனித வாடையைக் கண்டாலே வேறுப்பக்கம் சென்றுவிடக்கூடியவைகள் இவை. ( எவ்வளவு தீட்ச்சண்யம்!) கேடுக்கெட்ட மனிதஇனம்தான், இந்த அற்புத உயிரினங்களுக்கு கேடு விளைவிப்பது என்பதை சொல்லவும் வேண்டுமா?    

காணவிருக்கும் காணொளியின் கதாநாயகன்... ஆஸ்டின் ஸ்டீவன்ஸ் ! அவரைப் பற்றி அறிந்துக்கொள்ள நம் மற்றொருப் பதிவான ' பாம்புகள் பலவிதம்: ராஜ நாகத்தைத் தேடி' என்றப் பதிவில் காணலாம்! 
https://www.youtube.com/watch?v=zTqFVRx10AA