செவ்வாய், 10 மே, 2011

பாம்புகள் பலவிதம்:(3) ராஜ நாகத்தைத் தேடி....!


முந்தையப் பதிவுகளைப் பார்க்கத் தவறியவர்களுக்கு....


ஆஸ்டின் ஜேம்ஸ் ஸ்டீவன்ஸ்! பன்ச் டயலாக் பேசி, நம்ம ரசனையைக் கேலிப்பொருளாக்கி, மக்களின் மனதை மாசுப்படுத்திவரும், நம்மவூர் பம்மாத்து ஹீரோக்கள் போலில்லாமல், நிஜமாகவே ஹீரோவாக மதிக்கப்படவேண்டியவர்களில், மறைந்த 'ஸ்டீவ் இர்வின்' போன்று, உலகில் ஒரு சிலரில் இவரும் ஒருவர். அவரைப் பற்றி தெரிந்துக்கொள்ள, இங்கே....  மற்றும் இங்கேயும்...

நம்ம 'பாம்புகள் பலவிதம்' பதிவுகள் வரிசையில் கண்டிப்பாக சேர்க்கப்படவேண்டிய காணொளிகளில் ' In Search of the King Cobra 'வும் ஒன்று. இதில் ஆஸ்டின் ராஜ நாகத்தை தேடி வருவது நம்மவூர்ப் பக்கம். இந்த தேடுதல் வேட்டையில், அவரின் வாழ்நாள் கனவுகளில் ஒன்றை நிறைவேற்றிக்கொண்டார்! அது என்னத்தெரியுமா...? ராஜ நாகம் படமெடுத்தாடும்போது, அதன் தலைமீதுக் கைவைப்பது! 
அவரின் மேலும் சில வீடியோ கிளிப்பிங்குகள் 'Animal Planet' தளத்தில்....

நாம் ராஜ நாகத்தைப்பற்றி 'கிங் கோப்ரா = ராஜ நாகம் = டெரர் !' என்றப்பதிவில் பார்த்துவிட்டதால், நேராக படப் பார்க்க செல்லலாம் வாங்க.

3 கருத்துகள்:

கக்கு - மாணிக்கம் சொன்னது…

அதென்னவோ பாம்பு என்றால் I feel sick. எனினும் வீடியோவை பார்கின்றேன்.

Chitra சொன்னது…

வீடியோவை play செய்ய கிளிக் செய்தால், வேற வெப்சைட்க்கு போகுது.

M.S.E.R.K. சொன்னது…

அது வேறொன்றுமில்லை. மெகா வீடியோவின் விளம்பரங்கள். நீங்கள் அதை க்ளோஸ் பண்ணிவிடுங்கள்.