திங்கள், 21 மார்ச், 2011

பாம்புகள் பலவிதம் (2) - நாகம்: பாம்புகளின் அரசன்.



நாகப்பாம்பு...! சும்மா பேரைக்கேட்டாலே (நிஜமாகவே) அதுருதில்ல! ஆமாங்க, 'நல்லப்பாம்பு' என்றப் புனைப்பெயரிலும் வலம்வரும் இவைகளைப் பார்க்கவேவேண்டாம்... பெயரைக்கேட்டாலே உடல் சிலிர்த்துக்கொள்ளும்!
மனிதன் உண்மையிலேயே பய பக்தியோடு கும்பிடும் ஒரே தெய்வம், இதுத்தான்! 'Cobras: King of Snakes' அருமையான என்ற வீடியோவைப் பார்க்கும்முன்  இவைகளைப்பற்றி தெரிந்த, தெரியாத சிலப்பல தகவல்கள்.

வெப்ப நாடுகளில் வாழும் இவைகளில், ஏறக்குறைய 270 வகைகள் உண்டாம் !

Class: Reptilia
Order: Serpentes
Family: Elapidae
Diet: Lizards, Fish, Frogs and other Snakes
Natural Habitat: Warm-climate habitat, usually inhabiting on land, trees and also in water
Age: About 20 years
Gestation Period: 60-80 days (depending on the specie)
Number of Eggs: 20 - 40 

இந்த நாகக்குடும்பத்திலேயே மிகப்பெரியதும்,ரொம்ப விசேஷமானதுமாகக் கருதப்படுவது நம்ம ஊர் 'ராஜநாகம்'தான்! இவைகளை சந்திக்க இங்கே செல்லவும். 


அட்டகாசமான 'இரவுப்பார்வை' கொண்ட இவைகள், தங்களின் பிளவுப்பட்ட நாக்கின் உதவியால் பலதரப்பட்ட வாசனைகளை மிகத்துல்லியமாக உணரக்கூடியவை.  தங்களின் அருகே நிலவும் மிகச்சிறிய வெப்பநிலை மாற்றங்களை உணரக்கூடியவை! 


அவை சீற்றம் கொண்டாலோ,சும்மா பயமுறுத்தவோ, நம்ம ஊரில் கூறப்படுவதுபோல் 'படமெடுத்து ' ஆடும்! நம்ம பாம்பாட்டிகள் ஊதும் மகுடி, உண்மையில் அவைகளுக்காக அல்ல... நமக்காக! அவைகளுக்கு இந்தக்காட்சிகள் 'ஆடியோ இல்லாத விடியோவாகத்தான்' தெரியும்! ஏனென்றால் அவைகளுக்கு காது, கேட்-காது! [அடுத்தமுறை யாராவது பாம்பாட்டி மகுடி ஊதினால், நமக்கு பிடித்த பாடலை வாசிக்கச் சொல்லவேண்டும் ]
அவைகளின் பின்னால் இருக்கும் கண்கள் போன்ற படம், உண்மையில் அவைகள் தன்னைத்தானே பெரிதாகக் காட்டிக்கொள்ள உதவும் ஒரு illusion!... சில பட்டாம்பூச்சிகளின் இறக்கைகளில் உள்ள டிசைன் போல. 


இந்தியாவுக்கு ' The land of Snake Charmers ' என்றப் பெயர் இருப்பது நம்மில் எத்தனைப்பேருக்குத் தெரியும்? 









இன்னும் அப்படி யாராவதுச் சொனால் அவர்களை இங்கே தள்ளிவிடுங்கள்!

இதைப் படிக்கச் சொல்லுங்கள்....

முடிந்தால் இங்கேயும்போய் நீங்களும் ஒரு கலக்கு கலக்குங்க...


4 கருத்துகள்:

பொன் மாலை பொழுது சொன்னது…

ஐயோ சாமி, போதும் பாதியிலேயே நிறுத்திட்டேன். பாக்கவே பயமா இருக்கு.
அப்புறம் ராத்திரி நேரம் நம்ம கற்பனை கண்ணா பின்னான்னு அலையும். வேண்டாம்!

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

அப்படி சொன்னா விட்டுருவோமா... ? இன்னும் அஞ்சுப் பதிவு இருக்கு மக்கா!
கக்கு, நேத்து நீங்க பார்த்த ' கதிர்வீச்சு: பாடல்கள் ஒரு கால இயந்திரம் ' பின்னூட்டத்தைப் பார்த்தீர்களா?

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பாம்புகள் பற்றி அரிய விஷயங்கள் அறிந்து கொண்டோம்.

DR சொன்னது…

அழுவலகத்தில் இருப்பதால் வீடியோ பார்க்கவில்லை... வீட்டுக்கு போயி பாத்துட்டு என்னான்னு சொல்றேன்