ஞாயிறு, 13 மார்ச், 2011

பாம்புகள் பலவிதம் - (1) அனகோண்டா !" பாம்புகள் பலவிதம்". இது ஒரு தொடர்ப் பதிவு! ஒவ்வொருப் பதிவும், ஒவ்வொரு விதமானப் பாம்புகளைப் பற்றியது..... அதுவும் நம்ம தளத்திற்கே உரிய சிறப்பம்சமான, அருமையான வீடியோவுடன்!  ஏற்கனவே கிங் கோப்ரா = ராஜ நாகம் = டெரர் ! என்றப் பதிவைப் பார்த்துள்ளோம்.

'அனகோண்டா'!  உலகின் மிகப்பெரிய பாம்பு. ஜெனிபர்  லோபஸ் நடித்த திரைப்படத்தின் மூலமாக மேலும் புகழடைந்தப் பாம்பு!
"மின்னல் தண்டு" அல்லது " சாட்டைப் பாம்பு " என்று அர்த்தப்படும் 'ஹெனக்கான்டையா' (henacandaya) எனும் சிங்கள மொழிச் சொல்லின் இலத்தீன் மொழியாக்கம்தான் அனகோண்டா என்றும், நம்ம தமிழ் மொழியின் 'ஆனைக்கொண்டான்' (யானையையேக் கொல்லக்கூடிய) என்ற சொல் மறுவி, அனகோண்டா என்று ஆகியது என்றும் அதன் பெயரின் பூர்வீகம் பற்றிக் கூறுகின்றனர்.  

ஏறக்குறைய மலைப்பாம்பும் அனகோண்டாவைப் போல பெரியது என்றாலும், அனகோண்டாவின் உடல் சுற்றளவும், அதன் அட்டகாசமான தசைக்கட்டும், அதனை மலைப்பாம்பை விட கொஞ்சம் உயரத்தில் நிறுத்திவிடுகிறது.

பொலிவியன் அனகோண்டா, கரும்புள்ளி அனகோண்டா, பச்சை அனகோண்டா மற்றும் மஞ்சள் அனகோண்டா என நான்கு வகை அன்கொண்டாக்கள் உள்ளன. பச்சை அனகொண்டாக்கள் தான் மிகப்பெரியவை. எடை சுமார் 227 kg, நீளம் சுமார் 30 அடி!
பலவகை விலங்குகளை உண்ணும் இவை, ஒரே நாளில் 40 பவுண்ட் உணவை உண்ணுமாம்! முதலும் தான் பிடித்த விலங்கை சுற்றி வளைத்து, இறுக்கி, எலும்புகள் நொறுங்குமாறு பிழிந்து, அப்படியே ஸ்வாஹா செய்யுமாம்! அதன் வயிற்றில் சுரக்கும் ஒருவித 'நொதி/என்சைம்', அதை ஜீரணிக்க செய்யுமாம். இது நடக்க ஒரு வாரக் காலம் கூட ஆகும் ! ஒரு பெரிய விருந்து கிடைத்துவிட்டால், ஒரு வருடம் கூட எதுவும் உண்ணாமல் இருக்க முடியும் இவைகளால்!

 எப்போது நிலையான நீர்நிலைகளில் இருக்கும் இவை, அதிகப்பட்சம் பத்து நிமிடங்கள் மட்டுமே நீருக்குள் இருக்க முடியும். மட்ட்றபடி  தலையை மட்டும் நீருக்கு வெளியே வைத்துக்கொண்டு இருக்கும். சில நேரங்களில் மரங்களின் மேலும் ஏறி விடுமாம்!

அனகொண்டாக்கள் தம் வாழ்நாள் முழுவதும் வளர்ந்துக்கொண்டே இருக்குமாம்.

பெண் அனகொண்டாக்கள், ஆண் அனகொண்டாக்களைவிட அளவில் பெரியவை. (வழக்கம் போல!)

முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்கு பதிலாக, குட்டிகளாகவே வெளிவரும்..பிறக்கும்போதே இரண்டு அடி நீளமுள்ள இவைகள், அப்போதே நீந்தவும், வேட்டையாடவும் தொடங்கி விடுகின்றன.

உலகில் இவை இருப்பது தென் அமெரிக்காவின் அமேசான் காடுகளில்.

சினிமாக்களைத் தவிர, இவைகள் மனிதனுக்கு தீங்கு இழைப்பதில்லை. உண்மையில் மனித வாடையைக் கண்டாலே வேறுப்பக்கம் சென்றுவிடக்கூடியவைகள் இவை. ( எவ்வளவு தீட்ச்சண்யம்!) கேடுக்கெட்ட மனிதஇனம்தான், இந்த அற்புத உயிரினங்களுக்கு கேடு விளைவிப்பது என்பதை சொல்லவும் வேண்டுமா?    

காணவிருக்கும் காணொளியின் கதாநாயகன்... ஆஸ்டின் ஸ்டீவன்ஸ் ! அவரைப் பற்றி அறிந்துக்கொள்ள நம் மற்றொருப் பதிவான ' பாம்புகள் பலவிதம்: ராஜ நாகத்தைத் தேடி' என்றப் பதிவில் காணலாம்! 
https://www.youtube.com/watch?v=zTqFVRx10AA

3 கருத்துகள்:

தினேஷ் சொன்னது…

வழக்கம் போல இன்னொரு அருமையான பதிவு...

கக்கு - மாணிக்கம் சொன்னது…

டிஸ்கவரியில் நிறைய பார்த்துள்ளேன்.

/// பெண் அனகொண்டாக்கள், ஆண் அனகொண்டாக்களைவிட அளவில் பெரியவை. (வழக்கம் போல!)///

சிரித்து முடியல.

நன்றி பகிர்வுக்கு.

probi சொன்னது…

அனகோணடா 30அடி நீளம் வரை வளரக்கூடியது ஆனால் RETICULATED மலைப்பாம்பு 32அடி நீளம் வளரும்...ஆனால், மலைப்பாம்பு அனகோணடாவை விட மெல்லியவை...
அனகோணடாவுக்கு பொதுவாக எதிரிகள் கிடையாது..ஆனால், ஜாகுவார் எனும் சிறுத்தைப்புலி அனகோணடாவை வேட்டையாடும் சில நேரங்களில் கருப்பு கைமேன் என்னும் முதலையும் வேட்டையாடும்..
இவை மூன்றும் ஒன்றுக்கொன்று சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்து வேட்டையாடும்