புதன், 13 ஏப்ரல், 2011

விண்வெளிப் பொன்விழா!"Поехали! / Let's Go!" 
வோஸ்டாக் விண்வெளிக்கலம் வெடித்துக்கிளம்பியப்போது, யூரி ககாரின் 

கூறிய உற்சாக வார்த்தைகள்! 

மனித இன வரலாற்றிலே, கர்மன் கோடு (Karman Line) எனப்படும், பூமியின் வளிமண்டல எல்லைக்கு மேலேத் (கடல் மட்டத்துக்கு மேல் 100 km/62 mile உயரம்) தொடங்கும் விண்வெளியில் பறந்த முதல் மனித உயிர் யூரி ககாரின் என்ற ரஷ்ய விண்வெளிவீரர்! அவர் விண்வெளிக்கு சென்றுவந்து நேற்றோடு (12/04/1961) ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்த நாள்! மனிதனின் பிரபஞ்சத் தேடலில் ஒரு சிறிய ஆனால் முக்கியமானத் தாவல்!

அப்படிப்பட்ட சிறப்பான நாளை கொண்டாடத்தான் இந்த சிறப்புப் பதிவு! ஆகவே இப்போது யூரி காகரினைப் பற்றிய சில தகவல்கள்....

யூரி விண்வெளிக்கு சென்று திரும்பியவுடன் அவருக்கு ஏகப்பட்ட பாராட்டுக் கடிதங்கள் வந்துக் குவியத்தொடங்கின. ஆகவே அவருக்காகவே ஒரு தனி பின்கோடு வழங்கப்பட்டது! 
அது Moscow 705 !
பயிற்சி அளிக்கப்பட 20 பேரில், யூரி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அவரின் உயரக்குறைவும் ஒருக்காரணம்! ஏனென்றால் வோஸ்டாக்கின் காக்பிட் மிகவும் சிறியது!  

அவர்தான் பயணம்மேற்கொள்ளுகிறார்  எனபது நான்கு நாட்ககுக்கு முன்புதான் முடிவு செய்யப்பட்டது!

ராக்கெட் கிளம்புவதற்கு சுமார் 90 நிமிடங்களுக்கு முன்பு அதில் ஏறி அமர்ந்தார். அங்கு அவர் ஏதோ இசையை ரசித்துக்கொண்டு இருக்கும்போது, அவர் மேஜராக பதவிஉயர்வுப் பெற்றது அறிவிக்கப்பட்டது! 

அவரின் இந்த சிறப்புமிக்க விண்வெளிப் பயண நேரம், மொத்தமாக 108 நிமிடங்கள்!   

அவர் திரும்பி வந்தவுடன் அவருக்கு சோவியத் ரஷ்யாவின் மிக உயரிய விருதான 'லெனின் விருதும்', Hero of the Soviet Union என்ற விருதும் வழங்கப்பட்டன.

வோஸ்டாக் தரையிறங்கிய இடமான சரடோவ் என்ற இடத்தில் 120 அடி உயரத்தில் அரு நினைவு ஸ்துபி நிறுவப்பட்டுள்ளது.

ரஷ்ய நாணயங்களில் அவரின் உருவம் பொறிக்கப்பட்டு  பெருமைப்படுத்தப்பட்டார்!

பிற்காலத்தில் நிலவுக்கு சென்ற விண்வெளி வீரர்கள், அவரின் பதக்கங்களில் ஒன்றை நிலவிலேயே வைத்துவிட்டு வந்தனர். மற்றும் நிலவின் மறுபுறத்தில் ஒரு கிரேட்டர் எனப்படும் பள்ளத்துக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது!

இப்படி உலகையே முதலில் சுற்றிவந்த மனிதர், ஒரு சிறிய விமானவிபத்தில், தனது 34 வது வயதில் மரணமடைந்தார்!

"Yuri Gagarin: The man who fell to Earth" ஒரு சுவாரசியமானக் கட்டுரை.... படித்துப்பாருங்களேன்!இந்தப் பொன்விழா ஆண்டைக் கொண்டாட 'ஐரோப்பிய விண்வெளிக் கழகமும்' 'சர்வதேச விண்வெளி நிலையமும்' கைக்கோர்த்து 'முதல் சுற்று' [ First Orbit ] என்ற, சுமார் ஒன்றரை மணி நீளமுள்ள காணொளியை உருவாக்கியுள்ளனர்! இந்தக் காணொளி நமக்கு இலவசமாக, நம்ம வாழ்நாளிலேயே காண கொடுத்துவைத்திருக்கவேண்டும்! ஏனென்றால் நம்மால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத, நிஜ பூமியின் கிடைத்தற்கரியக் காட்சிகள் விண்வெளி நிலையத்திலிருந்து HD தரத்தில் படமாக்கப்பட்டுள்ளன! இதில் நடுவே யூரி காகரினின் உரையாடல், அருமையான பின்னணி இசையுடன்! அதுவும் யூரி ஐம்பது வருடங்களுக்கு முன் பயணம் மேற்கொண்ட அதேப்பாதையில்.... அதே நேரத்தில்... ஒரே அட்டகாசம் போங்க!

அவர்களின் வலைத்தளம் இங்கே....

படமாக்கிய பின்னணிக் கதை....

First Orbit முழுக் காணொளி....உலகை மாற்றிய 108 நிமிடங்கள் ....சுற்றுப்பாதையில் ஐம்பது வருடங்கள்.....
"வாழ்ந்தாலும் ஏசும்... தாழ்ந்தாலும் ஏசும்" என்பதர்க்கேற்ப, விண்வெளிக்கு சென்றது யுரியே இல்லை, விலாடிமிர் இலியுஷின் என்ற மற்றொரு பைலட்தான்
என்று வேறொருக் கோணத்தில் செய்திகள் உலாவருகின்றன. அதைப்பற்றிய காணொளி இது....எது உண்மையோ,பொய்யோ ... மனிதன் முதலில் விண்வெளியில் வலம் வந்தது கொண்டாடப்படவேண்டிய ஒன்றே! ஆகவே நாமும் கொண்டாடி, அந்த வரலாற்று நாயகர்களைப் போற்றுவோம். அதற்காகவே ஒரு குரூப் சேர்ந்து 'யுரியின் இரவு' [Yuri's Night ]  என்றப் பெயரில் கொண்டாடுகின்றனராம்! நம்ம வேலூர், கோயம்பத்தூர், மற்றும் பெங்களூர் பெயரை அந்த வலைத்தளத்தில் பார்த்தேன்! என்ன எதுவென்று கொஞ்ச விசாரியுங்கள் நண்பர்களே....!  

3 கருத்துகள்:

Chitra சொன்னது…

We went to a nearby Science Museum and watched the Special Show about Space Travels on Omni Max. The Documentary movie was to celebrate the 50th anniversary. It was awesome!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

நீங்களாவது இதனை பதிவிட்டு எங்களுக்கு ஞாபகப்படுத்தியதற்க்கு நன்றி.

சமுத்ரா சொன்னது…

GOOD ONE