இது ஒரு மீள்ப்பதிவு.... இன்னும் ஒரு அருமையான வீடியோவுடன்... இன்னும் சில தகவல்களுடன்....
சென்ற வருடம் வானியல் ஆர்வலர்களுக்கு ஒரு அரிய வரப்ரசாதமாக(!) இருந்தது. பிபிசி, தன் அட்டகாசமான ' Stephen Hawking's Universe' மற்றும், பேரா. ப்ரையான் காக்ஸ்(Prof. Brian Cox) அவர்களின் ' Wonders Of The Solar System ' போன்ற அறிவியல் ஆவணப்படங்களை உலகிற்கு அளித்து, தனக்கு நிகர்த்தானே என்று மீண்டும் நிருபித்துக்கொண்டது ! அந்த பிரமிப்பு விலகுமுன்னே, கடந்த சில நாட்களுக்கு முன்னே மீண்டும் அந்த (நிஜ) 'புன்னகை மன்னன் ' பேரா. ப்ரையான் காக்ஸ், தன் ' Wonders Of The Universe ' என்ற தொடர் ஆவணப்படங்களின் மூலம் நம்மையெல்லாம் ஒரு அறிவுச் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார்!
நம்மில் பலருக்கு இந்த துடிப்பான இளைஞரான பேரா. ப்ரையான் காக்ஸ்ஐப் பற்றி ஏற்கனவேத் தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் இங்கேச் சென்று தெரிந்துக்கொள்ளவும்.
13,700000,000,000 வருட வயதான....
93 பில்லியன் ஒளிவருட அகலமான .... 100 பில்லியனுக்கும் அதிகமான கேலகசிகளை தன்னுள் கொண்ட இந்த அளவிடமுடியாத அகண்ட,பிரபஞ்சம் என்றுமே மனிதனின் கற்பனைக்கும், தேடுதலுக்கும் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்துள்ளது. இந்த பிரபஞ்ச அற்புதங்கள் சிலருக்கு அன்னியமாகவும், சிலருக்கு அநியாயமாகவும், விளங்கிக்கொள்ளமுடியாததாகவும் தோன்றக்கூடும். ஆனால் நம்ம பேரா.காக்ஸ்,நம்மை இந்த சூப்பர் தொலைநோக்கிகள், விஞ்ஞான சோதனைக்கூடங்கள் போன்றவற்றிலிருந்து நம்மையெல்லாம் பிரித்துச்சென்று, இயற்கையாக உலகில் உள்ளவைகளைக்கொண்டு நமக்கு மிகப்பெரிய, சிக்கலான அறிவியல் உண்மைகளை விளக்க முற்படுகிறார்.
நம்மில் பலர் நினைத்தும் பார்த்து, செல்லமுடியாத வடதுருவதுக்குச் சென்று, சுழலும் பூமி எப்படி மின்னலைகளையும், காந்த அலைகளையும் உருவாக்குகிறது என்பதை விளக்குகிறார்! பிறகு பசிபிக் சமுத்திரத்தின் நடுவே இருந்துக்கொண்டு, பிரபஞ்சம் எப்படி அலைகளைப்போல் தொடர்புக்கொள்ளுகிறது என்றும், வெனிசுலாவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் அருகே இருந்துக்கொண்டு, Black Holes எனப்படும் கருந்துளைகள் அருகே ஒளி எப்படி நடந்துக்கொள்ளும் என்பதுப் போன்ற பலவற்றை விவரிக்கிறார்.
எந்த விதிகள் நம்ம பூமியில், ஒளி, நேரம், ஆற்றல், பொருள் போன்றவற்றை ஆள்கிறதோ, அதே ஒழுக்கம்தான், பிரபஞ்சமெங்கும் பின்பற்றப்படுகிறது என்பதைத் தெளிவாக்குகிறார்.
நவீன கிராபிக்ஸ் யுக்திகள் மூலமும், தன துணிச்சலான அறிவியல் அறிவாற்றலாலும், சர். டேவிட் அட்டன்பரோவுக்கு நிகராக, உலக மக்களின் மேல் அளவில்லா அன்புக்கொண்டு, தான் பெற்ற அறிவை எல்லோருக்கும் பகிரும் தனித்தன்னைக்கொண்ட வெள்ளைக்கார பேரா. ப்ரையான் காக்ஸ்சுக்கு நம் தமிழ் வணக்கங்கள் உரித்தாகுக!
ஒரு சுவாரசியமான தகவல்.... இவர் இயற்பியலில் PhD படிக்கும்போது, D:Ream என்ற ராக் இசைக்குழுவில் கீ போர்ட் கலைஞராக இருந்தார்!
செர்நில் உள்ள LHC இன் முக்கிய விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர். BBC செய்திக்காக, அவரிடம் கேட்டப்பட்ட கேள்விகளுக்கு அவரின் பதில்களைக் காண இங்கே ....
அவருக்கும் 'பிரபஞ்ச பிதாமகன்' பேரா. ஸ்டீபன் ஹாகிங்க்கும் நடந்த உரையாடலைக் கேட்க்க இங்கே....
3 கருத்துகள்:
பிரபஞ்ச பிதாமகன்' //
உரையாடல் பயனுள்ள பதிவு.
அருமையான பதிவு .
GOOD ONE THANKS
கருத்துரையிடுக