நான் எடுத்த நிலவின் புகைப்படம்.... Super Full Moon க்கு முந்தய நாள்
[18/04/2011- Liverpool. UK]
Super Full Moon அன்று... 19/04/2011 Liverpool.UK
சென்ற பதிவான ' நிலவின் நிழலில்'- அண்ணன் ஜெயதேவ் தாஸ் அவர்கள் பல ஆணித்தரமான கேள்விகளை நகைச்சுவையோடு முன்வைத்திருந்தார். அவருக்கு இந்த பதிவு சமர்ப்பணம்!
சிலக்கேள்விகளுக்கு, தாமதமாகத்தான் விடை கிடைக்கும். கடவுள் உண்டா இல்லையா? என்பதுப்போல்..... நாத்திகர்கள் கூறும் வாதம் மிகவும் அதிரடியாக இருப்பதால், ஆத்தீகர்கள் என்ன சரணடைந்து விடப்போகிறார்களா? ஆனால் என்றாவது ஒருநாள் இரண்டில் ஒன்று உண்மையென்று தெரியத்தான் போகிறது. அதுவரை உண்மை எதுவேன்றுத் தேடுவோம்!
அண்ணன் தாஸ் எள்ளி நகையாடியது.....
Jayadev Das said...\\இந்த அப்பல்லோ 11 நிலவில் இறங்கிய நிகழ்ச்சியை சுமார் 600 மில்லியன் மக்கள் தொலைகாட்சி மூலமாக கண்டு களித்தது, சார்லஸ்-டயானா திருமணத்தை 750 மில்லியன் மக்கள் கண்டது வரை உலக சாதனையாக இருந்து வந்தது!\\
ம்ம்ம்... உலகத்துலேயே ரொம்ப செலவு பண்ணி எடுத்த சினிமாப் படம் இந்த மனுஷன் நிலாவுக்கு [போகாமலேயே] போயிட்டு வந்தது தான் என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்களே, அதை நீங்கள் கேள்விப் பட்டதுண்டா? புரளி கிளப்புவதற்கென்றே சிலர் இருக்கிறார்கள், ஆனாலும் இந்த விஷயத்தை பொறுத்தவரை இவர்கள் சொல்வதை நம்பாமலும் இருக்க முடியவில்லை. எத்தனையோ காரணங்களை சொன்னாலும், சில காரணங்கள் மறுக்கவே முடியாத உண்மைகளாகப் எனக்குப் பட்டன.
1. அண்டவெளியில் இருந்து வரும் ஆபத்தான கதிர் வீச்சுகளை [Gamma rays, X-rays, high energy particles etc.,] புவியின் காந்தப் புலம் சிதறடித்து Van Allen Belt என்னும் பகுதிகளில் அதிக பட்ச அளவில் சிக்க வைக்கிறது. இதில் நுழைந்தவன் வெளியே வரும் போது பிணமாகத்தான் வருவான். இதைக் கடக்காமல் நிலாவுக்குப் போகமுடியாது என்று சொல்லத் தேவையில்லை!! http://www.youtube.com/watch?v=nm-xLKIqp9Q.
இதை அப்படியே கடந்து போகணும்னா எட்டு அடி அகலமுள்ள lead சுவர் வேண்டும்.
2. நிலவில் பகலில் வெப்பநிலை +220 deg C இதுவே இரவில் -180 deg C விண்வெளி வீரர்கள் போட்டிருந்த உடை இதையெல்லாம் தாங்காதுங்கண்ணொவ்.
17 April 2011 17:30
Jayadev Das said...
3. வின் களம் நிலவில் போய் இறங்கும் போது, ராக்கெட் திரஸ்டரில் இருந்து வெளியாகும் எறிந்த வாயுக்கள் ஒரு பெரிய பள்ளத்தையே உருவாக்கியிருக்கும், ஆனால் படங்களில் நிலவு மாடியூல் நிற்க்குமிடம் சமதளமாக உள்ளது, அதனை தாங்கி நிற்கும் நான்கு பீம்களிலும் புழுதி கொஞ்சம் கூட இல்லாமல் அவ்வளவு சுத்தம், நடுவில் உள்ள இடத்தில் , மனித ஷூக்களின் காலடித் தடங்கள் கூட. [வேறென்னா ஸ்டுடியோ வில் அதை தூக்கிக் கொண்டு வந்து வைத்தவனோடதுதான் !!]
17 April 2011 17:30
Jayadev Das said...
4.நிலாவில் கார் ஒட்டினார்கள், நிலவில் காற்று இல்லாததால், கார் சக்கத்திளிருந்து வரும் மண் அறுபது அடிக்கு parabola வடிவில் பறந்து போய் விழ வேண்டும், ஆனால் அவர்கள் காட்டும் படங்களில் எல்லாம் சில அடிகளிலேயே மண் இல்லாம் தடை பட்டு விடுகிறது, அதை தடுப்பது என்ன?
17 April 2011 17:31
Jayadev Das said...
1970 களில் 12 தடவை போயிட்டு வந்த பயல்களுக்கு அதுக்கப்புறம் போக வேண்டிய எண்ணமே வரவில்லையா?
இந்தியா அனுப்பிய சந்திராயன் விண்கலம் நிலவை அத்தனை படமேடுத்ததே, அமேரிக்கா காரன் நட்டு வைத்த கோடி, முதல் காலடித் தடம், ஒட்டிய கார்கள் எல்லாம் அங்கேயே தானே இருக்க வேண்டும், அவற்றை மட்டும் படமெடுக்கவே இல்லையா? # டவுட்டு ஹி ...ஹி ...ஹி ...
====================================================================
அமெரிக்காக்காரன் கதையே இந்த நாறு நாறுதுயென்றால்.... நம்ப ஆளுங்க கதையை என்னவென்றுச் சொல்லுவது? ஒருவேளை நம்ப ஆளு நிலாவுக்கு போனானோ .... இல்லை அம்மாவாசை என்று திரும்பி வந்துவிட்டானோ...? நான் ஏதோ நம்மை நாமே தரக்குறைவாக நக்கலடிப்பதாக நினைத்துவிட்டால், தயவு செய்து என்னை மன்னிக்குமாறு வேண்டுகிறேன் நண்பர்களே. வெள்ளைக்காரன் எல்லாம் பெரியக் கொம்போ, நாம வெரும்பயலுகளோ இல்லை! நம்ம நாட்டு நிலை அப்படியுள்ளது! இங்கிலாந்து MP தனக்கு ஒதுக்கப்பட்ட பாராளுமன்ற செலவுக்கானப் பணத்தை சொந்த நலனுக்காக செலவு செய்துவிட்டார் என்பதற்கு, 16 மாத சிறைத்தண்டனை பெற்றார்! இது நம்ம நாட்டில் நடக்குமா? அந்த வயித்தெரிச்சலில்தான் அப்படிக்கூற வேண்டியக்கட்டாயம் வந்தது. தவறு என்றால் மீண்டும் மன்னிக்கவும்.
"Did we really land on the Moon?" - Part 1 - Dr Martin Hendry -
Science Week 2010 lecture
Did we land on the moon ?
Mithbusters: Moon Landing photo hoax
NASA Moon Hoax - Analysis of the Lunar Photography
NASA Moon Hoax - Environmental Dangers & The Trouble
MoonFaker: Why Not Go Back?
MoonFaker: The Flags Are Alive.
MoonFaker: No Crater.
MoonFaker: Radioactive Anomaly.
MoonFaker: All Bets Are On
MoonFaker: The Penny Drops.
MoonFaker: Cats & Elephants
MoonFaker: One Giant Leap.
11 கருத்துகள்:
எத்தனை தகவல்கள் எத்தனை விஷயங்கள்... ஸ்க்ரால் செய்வதர்க்கே 10 நிமிடம் ஆகிறது...
உங்கள் பொறுமையை பாராட்டியே ஆக வேண்டும்...
தொடர்க உங்கள் அறிவியல் பயணம்...
பாதி தாங்க படிக்க முடிஞ்சுது. யோசிக்க வச்சுட்டீங்க! எத நம்பறதுன்னு சுத்தமா புரியல!திரும்பி வந்து முழுசா படிக்கணும்.
தங்களது பதிவிற்கு நன்றி நண்பரே, தங்களைக் கோபப் படுத்திவிட்டேன் என்று மட்டும் தெரிகிறது. நீங்கள் பேரும் முயற்சியெடுத்து தகவல்களைச் சேர்த்து பதிவு போடுகிறீர்கள், தங்களது விடியோக்கள் எல்லாம் காணக் கிடைக்காதவை, எல்லோராலும் இணையத்தில் தேடியெடுக்க முடியாதவை. ஆனாலும், உண்மை என்று வரும் போது என்னால் compromise செய்து கொள்ள முடியாது. சில விஷயங்களை இயற்பியல் படித்தவனின் பார்வையில் பார்த்தல் மட்டுமே விளங்கும், அவற்றைத் தான் முன்னர் பின்னூட்டமிட்டிருந்தேன். நிலவுக்கு போகவில்லை என்று சொன்னால் அது ஏதோ உங்கள் தவறு போல என்று தயவு செய்து எண்ண வேண்டாம். அந்தப் பயல்கள் நிஜமாகவே போகாமல் உலகத்தை ஏமாற்றிவிட்டார்கள். அதற்காக நீங்கள் எண்ண செய்வீர்கள்? இதை உங்களை விமர்சித்ததாக நினைக்க வேண்டாம்.
இந்த வீடியோக்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கிறேன், பின்னர் பின்னூட்டமிடுகிறேன். அதற்கும் முன் இன்னும் சில கேள்விகள். பூமியிலிருந்து வானத்தின் நட்சத்திரங்கள் தெளிவாகத் தெரிவது இல்லை, ஏனெனில் வாயு மண்டலத்தால் ஒளி சிதறடிக்கப் பட்டு பூமியை வந்தடையும் போது மங்கலாகி விடுகிறது. இந்தக் குறையைப் போக்கவே Hubble Telescope விண்வெளியில் நிறுவப் பட்டது. இவர்கள் நிலாவுக்குச் சென்றதாகச் சொல்லும் காலாத்தில் Hubble Telescope இல்லை. காற்று மண்டலம் இல்லாத இடத்திலிருந்து விண்மீன்களைப் பார்த்தால் எப்படித்தான் இருக்கும் என்ற ஆவல் அப்போது எல்லோருக்குமே உண்டு. 12 முறை போய் வந்த இந்தப் பன்னாடைப் பயல்கள் ஒரு படத்தைக் கூட வானத்திலுள்ள விண்மீன்களை நோக்கி எடுக்கவே இல்லை. நிலவில் காற்று இல்லாததால் பகலிலும் வானம் இரவு போலவே பளிச் என்று விண்மீன்கள் தெரியும் படி இருக்கும். படம் எடுக்காததற்கு இவர்கள் சொன்ன காரணம், வெளிச்சமான நிலவின் மேற்பறப்பும் வின் மீன்களும் ஒரு சேர படமெடுக்க முடியாது என்பதுதான். அப்படியானால், வானத்தை நோக்கி சில படங்களை எடுத்திருக்கலாமே? அல்லது அவர்கள் பயணம் செய்யும் வழியில் எடுத்திருக்கலாமே? ஏன் விண்மீன்களின் ஒரு படம் கூட இல்லை? "நாயகரா நீர்வீழ்ச்சிக்கு போன ஒருத்தனிடம், அங்கே என்ன விசேஷம் என்று கேட்டால், அவன் "பர்கர் நன்றாக இருந்தது, சாப்பிட்டு விட்டு வந்தேன்" என்று சொன்னால் எப்படி இருக்கும்? நிலவுக்குப் போனதாக படமெடுக்க முடிந்த இவர்களால், அந்த மாதிரி படத்தை எடுக்க முடியவில்லை, அப்படி எடுத்திருந்ததாக காட்டியிருந்தால் மாட்டிக் கொண்டிருப்பார்கள்.
மேலும் இவர்களின் கேமராக்கள் உடலுக்கு வெளியேதான் இருக்கிறது, குளிரூட்டப் படவில்லை. நிலவின் வெப்பம் 200 deg C. அந்த வெப்ப நிலையில் பிலிம் கருகி சுருங்கிப் போயிருக்கும், படமெல்லாம் எடுக்க முடியாது. கேமரா வைத்திருந்தது வயிற்ருப் பகுதியில், இவர்களால் வியூ பைண்டரைக் கூட பார்க்க முடியாது, ஆனால் எடுத்த புகைப் படங்கள் எல்லாம் ஆக, மாறாமல், இல்லாமல் அத்தனை கச்சிதமாக இருந்தது. இதை நாசாவின் புகைப் பட நிபுணர் ஒருத்தரே "இக்கட்டான இடத்தில் கேமராவை வைத்துக் கொண்டு இவ்வளவு கச்சிதமாக எப்படி எடுத்திருக்க முடியுமென்று விளக்க முடியவில்லை" என்று கூறி விட்டார்.
மேலும் இவர்களின் கேமராக்கள் உடலுக்கு வெளியேதான் இருக்கிறது, குளிரூட்டப் படவில்லை. நிலவின் வெப்பம் 200 deg C. அந்த வெப்ப நிலையில் பிலிம் கருகி சுருங்கிப் போயிருக்கும், படமெல்லாம் எடுக்க முடியாது. கேமரா வைத்திருந்தது வயிற்ருப் பகுதியில், இவர்களால் வியூ பைண்டரைக் கூட பார்க்க முடியாது, ஆனால் எடுத்த புகைப் படங்கள் எல்லாம் Professional ஆக, Focus மாறாமல், Blur இல்லாமல் அத்தனை கச்சிதமாக இருந்தது. இதை நாசாவின் புகைப் பட நிபுணர் ஒருத்தரே "இக்கட்டான இடத்தில் கேமராவை வைத்துக் கொண்டு இவ்வளவு கச்சிதமாக எப்படி எடுத்திருக்க முடியுமென்று விளக்க முடியவில்லை" என்று கூறி விட்டார்.
சில சமயம் Solar Flare காரணமாக பூமியிலேயே கதிர்வீச்சு தாக்கப் பட்டு சிலர் தோலில் burn ஏற்பட்டு பாதிக்கப் படுகிறார்கள். நாம் வாழ பாதுக்காப்பான இயற்க்கை அமைப்புகள் உள்ள பூமியிலேயே இந்த நிலை என்றால், வெளியே எதுவுமே இல்லாத இடம் எப்படி இருக்கும்? வான் ஆலன் பெல்ட் பகுதிக்கு வெளியே போனவன் உயிரோடு திரும்ப முடியாது. காஸ்மிக் கதிர்களால் அவித்த முட்டையைப் போலாகிவிடுவான். அமேரிக்கா காரனை விட எவ்வளவோ முன்னேறி இருந்த ரஷ்யாக் காரன் இதற்காகவே ஒருபோதும் மனிதனை நிலாவுக்கு அனுப்பவில்லை.
நிலவில் போய் இறங்கும் Lunar Module ஐ பூமியில் சோதித்துப் பார்க்கும் போது அதில் உட்கார்ந்திருந்த ஆம்ஸ்டிராங்கால் கட்டுப் படுத்த முடியாமல், அதிலிருந்து பாராசூட் மூலம் குத்தித்து தப்பித்தார். ஆனால் 12 முறையும் நிலாவில் எந்த விதப் பிரச்சினையும் வராமல் இந்தப் பயல்கள் இறங்கியதாக கதை கட்டுகிறார்கள். நம்ப முடியவில்லை.. காதில் பூ வைக்கலாம், கூடைப பூவையே சுற்றலாம், சுற்றலாம், பூந்தோட்டத்தையே வைக்கலாமா?
அன்பு நண்பர் ஜெயதேவ தாஸ் அவர்களுக்கு,
முதலில் நம்ம தளத்துக்கு வருவதற்கு நன்றி. அதிலும் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி. அதிலும் நிஜங்களை தேடும் உத்வேகத்துக்கு பாராட்டுகளும் நன்றிகளும். முதலில் நான் கோபப்பட்டு பதிவுப் போட்டேன் என்று உங்களை எண்ணவைக்கும் தரத்தில் என் பதிவு இருந்ததற்கு மன்னிக்கவும். இந்தப் பதிவு ரொம்ப நாட்களுக்கு முன்பே draft ஆக வைத்திருந்தேன். நீங்க புள்ளி வைக்க நான் கோலம் போட்டுவிட்டேன்.[என் சமர்ப்பணம் அப்படி உங்களை நினைக்கவைத்திருக்கும் என்று யூகிக்கிறேன். ஆனால் அது நிஜம். நீங்கள் ஆட்சேபித்தால் அதை நீக்கி விடுகிறேன்] நான் நிறைய ஆவணப்படங்கள் பார்ப்பவன். இன்னும் இயற்பியலும், உயிரியலும் கலந்துப்படித்துக் கொண்டிருக்கும் மாணவன். நான் பார்த்ததில்,படித்ததில் என்னைக் கவர்ந்தவைகளை நம்ம தமிழ் நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்ளுகிறேன். ' மாம்ஸ்... நேத்து ஒரு படம் பார்த்தேன், நல்ல இருக்குடா, நீயும் போய்ப் பாரேன்....' என்பதுப்போல்! ஆனால் அது எல்லோருக்கும் பிடித்திருக்கும் என்பது நிச்சயமல்ல. அதுவே என்னுடைய கருத்துமல்ல. என் தனிப்பட்ட கருத்துக்களை மற்றவர் மேல் திணிக்கும் ஆர்வமும் இல்லை. ஆகவே அடிக்கடி வாங்க. நன்றி. (அந்த விஜயகாந்த் பின்னூட்டங்கள் நன்றாக இருந்தன!)
இதையும் போய்ப் பாருங்க... ஒரு வேளை இதுவும் ஒருக் காரணமாக இருக்கலாம்!
http://prabanjapriyan.blogspot.com/2009/07/blog-post_20.html
\\நான் பார்த்ததில்,படித்ததில் என்னைக் கவர்ந்தவைகளை நம்ம தமிழ் நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்ளுகிறேன்.\\ நன்றி நண்பரே, தொடர்ந்து தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள். மாற்றுக் கருத்துக்கள் வருவது உங்களை challenge செய்ய என்று எண்ண வேண்டாம், தங்கள் பதிவுகள் படிக்கப் படுகின்றன என +ve ஆக எடுத்துக் கொள்ளுங்கள்!!
கருத்துரையிடுக