சனி, 16 ஏப்ரல், 2011

நிலவின் நிழலில்....! (வீடியோ)

1968 தொடங்கி 1972 வரை ஒன்பது அமெரிக்க விண்வெளி ஓடங்கள் நிலவிற்கு சென்று வந்துள்ளன. அதில் சென்ற 12 மனிதர்களுக்கு மட்டும், இதுவரை மனித இன வரலாற்றிலேய, வேறொரு உலகத்தில் கால்பதித்து, நடைப்பயின்றப் பெருமை உள்ளது!  

இந்த 'அப்பல்லோ விண்வெளித் திட்டம்' என்றழைக்கப்பட்ட அறிவியல் அற்புதத்தை, நினைவுக்கூறும் விதமாக, 2007 இல் டேவிட் சிங்டன் மற்றும் 'First Orbit' புகழ், கிறிஸ்டோபர் ரிலே ஆகியோரின் இயக்கத்தில் NASA வின் துணையோடு உருவாக்கப்பட்டப் படம்தான் 'In the Shadow of the Moon'. முதல் சர். ஆர்தர் கிளார்க் அவார்டை தட்டிச் சென்ற மிகச்சிறந்தப்படம்! இந்தப்படத்தின் விசேஷம் என்னவென்றால், நாசாவிடம் இருந்த இதுவரை வெளிஉலகத்துக்குத் தெரியாத பல விடியோக் கிளிப்பிங்குகளைக்கொண்டு, இதுவரை நிலவிலே கால் பதித்து உயிரோடு இருக்கும், அந்த நெஞ்சுரம் கொண்ட வரலாற்று நாயகர்களின் அனுபவங்களை, அவர்களின் வாயாலேயே சொல்லவைத்ததுத்தான்! 

அந்த நாயகர்கள் முறையே அல் பீன், மைகேல் காலின்ஸ், புஸ் ஆல்ட்ரின்,சார்லி டியுக், யூஜின் சேர்னன் மற்றும் ஹாரிசன் ஷ்மிட். இதில் புகழ்ப்பெற்ற நீல் ஆம்ஸ்ட்ராங் மட்டும் பங்குபெற மறுத்துவிட்டாராம்! 


இந்த அருமையான காணொளியைக்  காணுமுன்... சில தகவல்கள்... 


  • முதன் முதலில் நிலவில் கிருஸ்தவ மத சடங்கை நடத்திய முதல் மனிதர்  ஆல்ட்ரின்! அவரின் மத போதகர் கொடுத்தனுப்பிய அப்பத்தையும், திராட்சரசத்தையும் கொண்டு தனக்குத்தானே இராபோஜனம் கொடுத்துக்கொண்டார்!
  • நீல் ஆம்ஸ்ட்ராங் வேண்டுமென்றால் நிலவில் கால் பதித்த முதல் மனிதராக இருக்கலாம், ஆனால் நிலவில் முதலில் சிறுநீர்க் கழித்த முதல் மனிதர் ஆல்ட்ரின்! (டியுப் வழியாகத்தான்... லட்சக்கணக்கானவர்கள் நேரடி ஒளிபரப்பின் மூலம் பார்த்துக்கொண்டிருக்கும்போது!)
  • இவர்கள் பூமிக்கு வந்து தங்கள் பாதுகாப்புக் கவசத்தை கழற்றியப்போது 'ஈரமான சாம்பலின் வாசனை வந்தது' என்று ஆம்ஸ்ட்ராங்கும், 'வெடிக்கப்பட்ட துப்பாக்கி மருந்தின் வாசனை ' என்று ஆல்ட்ரினும் கூறினார்! ஆனால் அந்த வாசனை வந்தது அவர்களின் காலனிகளில் ஒட்டியிருந்த நிலவின் தூசியில் இருந்து...!
  • பூமிக்கு திரும்பும் வேளையில், விண்வெளிக்கலத்தை மேலே உந்தவைக்க இயக்கப்படவேண்டிய ஒரு விசை தற்செயலாக ஒடிந்துவிட்டது. அதை ஒரு பேனாவை கொண்டு இயக்கியுள்ளனர்! அதை ஓடித்தவர்... மீண்டும் நம்ம ஆல்ட்ரின்தான்!
  • இந்த அப்பல்லோ 11 நிலவில் இறங்கிய நிகழ்ச்சியை சுமார் 600 மில்லியன் மக்கள் தொலைகாட்சி மூலமாக கண்டு களித்தது, சார்லஸ்-டயானா திருமணத்தை 750 மில்லியன் மக்கள் கண்டது வரை உலக சாதனையாக இருந்து வந்தது!
  • நிலவில் இருந்து வந்தவர்கள் தங்களுடன் ஏதாவது கிருமிகளை கொண்டுவந்துவிட்டிருப்பார்களோ என்ற பயத்தில், அவர்கள் கட்டாய தனிமைப் படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டார்கள்!
  • நிலவிலே அவர்கள் செய்த கடினமான வேலை... நிலவின் தரையில் அமெரிக்கக் கொடியைப் பதிப்பது! ஏனென்றால் நாசாவின் ஆராய்ச்சி கூறியதுப்போல்அதன் தரை மிருதுவாக இல்லை. கொஞ்ச கஷ்டப்பட்டுத்தான் கோடியை நாட்டியுள்ளார்கள்!
  • அப்பல்லோவின் பயணக்காலம் மூன்றரை நாட்கள்! அவர்கள் நிலவில் இருந்தக்காலம் 21 மணிகளுக்கு கொங்க அதிகம்!
  • பூமியில் மூன் வாக்கை (Moon Walk ) மைகேல் ஜாக்சனுக்கு,நிலவுக்கு நிஜ Moon Walk பண்ணவேண்டும்  என்ற ஆசை இருந்ததாம்!
இந்தத் திரைப்படத்தின் வலைத்தளம்...

நன்றி.


6 கருத்துகள்:

பொன் மாலை பொழுது சொன்னது…

மிக சுவாரஸ்யமான ஒன்று படத்தை பார்த்துவிட்டு மீண்டும் வருவேன்:))

Jayadev Das சொன்னது…

\\இந்த அப்பல்லோ 11 நிலவில் இறங்கிய நிகழ்ச்சியை சுமார் 600 மில்லியன் மக்கள் தொலைகாட்சி மூலமாக கண்டு களித்தது, சார்லஸ்-டயானா திருமணத்தை 750 மில்லியன் மக்கள் கண்டது வரை உலக சாதனையாக இருந்து வந்தது!\\ ம்ம்ம்... உலகத்துலேயே ரொம்ப செலவு பண்ணி எடுத்த சினிமாப் படம் இந்த மனுஷன் நிலாவுக்கு [போகாமலேயே] போயிட்டு வந்தது தான் என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்களே, அதை நீங்கள் கேள்விப் பட்டதுண்டா? புரளி கிளப்புவதற்கென்றே சிலர் இருக்கிறார்கள், ஆனாலும் இந்த விஷயத்தை பொறுத்தவரை இவர்கள் சொல்வதை நம்பாமலும் இருக்க முடியவில்லை. எத்தனையோ காரணங்களை சொன்னாலும், சில காரணங்கள் மறுக்கவே முடியாத உண்மைகளாகப் எனக்குப் பட்டன.

1. அண்டவெளியில் இருந்து வரும் ஆபத்தான கதிர் வீச்சுகளை [Gamma rays, X-rays, high energy particles etc.,] புவியின் காந்தப் புலம் சிதறடித்து Van Allen Belt என்னும் பகுதிகளில் அதிக பட்ச அளவில் சிக்க வைக்கிறது. இதில் நுழைந்தவன் வெளியே வரும் போது பிணமாகத்தான் வருவான். இதைக் கடக்காமல் நிலாவுக்குப் போகமுடியாது என்று சொல்லத் தேவையில்லை!! http://www.youtube.com/watch?v=nm-xLKIqp9Q.
இதை அப்படியே கடந்து போகணும்னா எட்டு அடி அகலமுள்ள lead சுவர் வேண்டும்.

Jayadev Das சொன்னது…

2. நிலவில் பகலில் வெப்பநிலை +220 deg C இதுவே இரவில் -180 deg C விண்வெளி வீரர்கள் போட்டிருந்த உடை இதையெல்லாம் தாங்காதுங்கண்ணொவ்.

Jayadev Das சொன்னது…

3. வின் களம் நிலவில் போய் இறங்கும் போது, ராக்கெட் திரஸ்டரில் இருந்து வெளியாகும் எறிந்த வாயுக்கள் ஒரு பெரிய பள்ளத்தையே உருவாக்கியிருக்கும், ஆனால் படங்களில் நிலவு மாடியூல் நிற்க்குமிடம் சமதளமாக உள்ளது, அதனை தாங்கி நிற்கும் நான்கு பீம்களிலும் புழுதி கொஞ்சம் கூட இல்லாமல் அவ்வளவு சுத்தம், நடுவில் உள்ள இடத்தில் , மனித ஷூக்களின் காலடித் தடங்கள் கூட. [வேறென்னா ஸ்டுடியோ வில் அதை தூக்கிக் கொண்டு வந்து வைத்தவனோடதுதான் !!]

Jayadev Das சொன்னது…

4.நிலாவில் கார் ஒட்டினார்கள், நிலவில் காற்று இல்லாததால், கார் சக்கத்திளிருந்து வரும் மண் அறுபது அடிக்கு parabola வடிவில் பறந்து போய் விழ வேண்டும், ஆனால் அவர்கள் காட்டும் படங்களில் எல்லாம் சில அடிகளிலேயே மண் இல்லாம் தடை பட்டு விடுகிறது, அதை தடுப்பது என்ன?

Jayadev Das சொன்னது…

1970 களில் 12 தடவை போயிட்டு வந்த பயல்களுக்கு அதுக்கப்புறம் போக வேண்டிய எண்ணமே வரவில்லையா?
இந்தியா அனுப்பிய சந்திராயன் விண்கலம் நிலவை அத்தனை படமேடுத்ததே, அமேரிக்கா காரன் நட்டு வைத்த கோடி, முதல் காலடித் தடம், ஒட்டிய கார்கள் எல்லாம் அங்கேயே தானே இருக்க வேண்டும், அவற்றை மட்டும் படமெடுக்கவே இல்லையா? # டவுட்டு ஹி ...ஹி ...ஹி ...