முதல் பாகம் ' BBC இன் 'மனித உடலுக்குள்ளே...' - 1. படைப்பு
'In side the Human Body - First to Last' என்ற இந்தப் பகுதியில் Dr.மோஸ்லி நமக்கு காண்பிக்கப்போவது, 'மனிதஉடல் நம் முதல் சுவாசத்திலிருந்து கடைசி மூச்சு வரை, நொடிக்கு நொடி, நிமிடத்துக்கு நிமிடம், நம்மை உயிருடன் வைத்திருக்க என்னென்ன போராட்டங்களை அற்புதங்களையும் நடத்துகிறது' என்பதைப்பற்றி!
ஸ்லோ மோஷனில் காண்பிக்கப்படும் ஒரு நீரில் நடக்கும் பிரசவத்தில் பிறக்கும் ஒரு குழந்தையுன் முதல் சுவாசத்தில் தொடங்கும் இந்தப் படம்... உலக மக்களின் அறிவு விருத்திக்காக, தன் இறுதி நாட்களையும், தான் விடப்போகும் கடைசி மூச்சை படமாக்க அனுமதி அளித்த, இங்கிலாந்தைச் சேர்ந்த 84 வயது பெரியவர் திரு.ஜெரால்ட் அவர்களின் மரணத்தில் முடிகிறது.
நம் உயிரை தக்கவைத்துக்கொள்ளும் வாழ்க்கை எனும் போராட்டத்தில், நம் உடலுக்குள்ளே நடக்கும் விந்தைகளை, நவீன தொழில்நுட்பப உதவியுடன் ஒரு அருமையான படமாக தந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளனர் இந்த பிபிசி குழுவினர். இந்தக் கதையோட்டத்தின் நடுவே, ஒன்பது நிமிடங்கள் வரை நீருக்குள் இருந்து சாதனைப் படைக்கும் நீச்சல் வீரர் ஹெர்பர்ட், விம் என்ற ஐஸ் மனிதன், பத்து வருடங்களாக வெறும் சிப்ஸ் போன்ற உணவையே உண்டு உயிர் வாழும் டெபி என்ற பெண்ணையும் இந்தப் படத்தின் மூலம் சந்திக்க இருக்கிறோம். அசாதரணமான வாழ்க்கையை வாழும் இவர்களுக்கு, இவர்களின் உடல் எப்படி ஒத்துழைக்கிறது என்பதையும் காணப்போகிறோம்.
படம் பார்க்கத்தொடங்கும் முன்பு, பெரியவர் ஜெரால்டின் மரண காட்சிகள் இங்கிலாந்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
செய்தியைப் படிப்பதோடு மட்டுமல்லாமல், அதிலுள்ள வாசகர் கருத்துக்களையும் படியுங்கள்... அதில்தான் நிறைய சுவாரசியம்!
இதுப்போன்ற காரியத்தை நம்மால் செய்திருக்க முடியுமா என்ற கேள்வியை நம்முன் வைத்துவிட்டுச் சென்றுள்ளார் பெரியவர் ஜெரால்ட் ! இதுவும் ஒரு கண் தானம், ரத்ததானம், உடல் தானம் போல அல்லவா நண்பர்களே...?
நீங்க என்ன நினைக்கிறீங்க?