திங்கள், 12 செப்டம்பர், 2011

ஹாக்கிங்... - A Brief History of Mine


பேரா.ஸ்டீபன் ஹாகிங்கைப் பற்றிய முந்தையப் பதிவு...


2004 ஆம் வருடம் BBC தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்ட காணொளித்தான் இப்போது நாம் காணப்போகும் 'Hawking - The story of the search for the beginning of time'. 

1963, இளம் ஸ்டீபன் ஹாகிங்கின் 21 ஆம் பிறந்த நாளில் துவங்குகிறது இந்தக் கதை. எதிர்க்காலத்தில் அவரின் முதல் மனைவியாகப்போகும் ஜேன் வைல்ட் எனும் இளம் பெண்ணின் நட்பு, முதல் முதலாக அவருக்கு அந்தக் கொடிய இருப்பது கண்டுப்பிடிக்கப்படுவது, தன டாக்டரேட் படிப்பை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கத் துவங்குவது, பெருவெடிப்புக் கொள்கைப் பற்றி தன ஆசிரியரான பிரெட் ஹாயில் அவர்களுடன் கொள்கை மோதலில் ஈடுப்படுவது, ரோஜர் பென்ரோஸின் அறிவுக் கூட்டணி போன்ற நிகழ்வுகளை சுவாரசியமாக, மனதைத்தொடும்விதமாக படமாக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் ராபர்ட் வில்சன் & அர்னோ பென்சியாஸ் என்ற பெருவெடிப்பின் பொது வெளிப்பட்ட நுண் கதிர்களை கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் பேட்டியின் பின்புலத்தில் பிளாஷ் பேக்காக காட்டப்படுவது மிகவும் சிறப்பு! இளம் ஸ்டீபன் ஹாகிங்காக நடித்துள்ள பெனிடிக்ட் கும்பெர்பெட்ச், அவரி மிகவும் அருமையாக சித்தரித்துள்ளார். அவர் மட்டுமல்ல, ஜேன் வைல்டாக லிசா தில்லான், ரோஜெர் பென்ரோசாக டோம் வார்டு போன்ற அனைவரும் கதாப்பாதிரங்களாகவே வாழ்ந்துள்ளனர். இந்தப் படம் அவரை நேசிக்கும் அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை.நிஜ ஜேன் வைல்ட்.


நிஜ ரோஜெர் பென்ரோஸ் 


நிஜ ராபர்ட் வில்சன் & அர்னோ பென்சியாஸ்

இனி .... ஹாக்கிங்...

2 கருத்துகள்:

Peraveen சொன்னது…

how to download the video?

M.S.எட்வின் .R.K. சொன்னது…

அந்த மெகாவீடியோ பிளேயரில் வலதுப்புறம் அம்புக்குறி போட்டு ஒரு ஐக்கான் இருக்கும் பாருங்க, அதைக் கிளிக் செய்தால் டவுன்லோட் ஆகும் பிரவீன்.