Stars லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Stars லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

ஸ்டீபன் ஹாக்கிங், கார்ல் சேகன், ஆர்தர் சி. கிளார்க் - ஒரு அறிவியல் சங்கமம்!






பேரா.ஸ்டீபன் ஹாகிங்கைப் பற்றிய முந்தையப் பதிவுகள் ...

ஹாக்கிங்... - A Brief History of Mine

பிரபஞ்சம் ஒரு படைப்பா...? - பேரா.ஸ்டீபன் ஹாகிங்



மூன்று விஞ்ஞானப் பெருந்தலைகளின் சங்கமம்! பேரா.ஸ்டீபன் ஹாக்கிங், வானவியலாளர்.கார்ல் சேகன், விஞ்ஞான புனைக்கதை எழத்தாளர் ஆர்தர் சி க்ளார்க், இந்த மூவரும் நாம் வாழும் காலத்தில் வாழும்...வாழ்ந்த[தற்போது கார்ல் சேகன் மற்றும் ஆர்தர் சி க்ளார்க் ஆகிய இருவரும் இல்லை] அறிவியல் சிந்தனையாளர்கள். இவர்கள் மூவரையும், பிரிட்டிஷ் செய்தியாளரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான மெக்னுஸ் மேக்னுசன் ஒன்றுப்படுத்தி 'God, the Universe, and Everything Else' என்ற பெயரில், ஆங்கிலத்தில் 'கலோகுயம்' (colloquium ) என்பார்களே,அதுப்போன்ற  அறிவியல் கலந்துரையாடலை ஏற்பாடு செய்து வரலாறுப் படைத்தார். இது நடந்தது 1988 இல்... மார்ஸ் ரோவரோ, ஹப்பிள்  விண்வெளித் தொலைநோக்கியோ விண்ணில் செலுத்தப்படாதக் காலம். ஆனாலும் இந்த மூன்று மேதைகளை ஒரே மேடையில் காண நமக்குக் 
கிடைத்த ஒரே வாய்ப்பு! ஆகவே இதுவரைப் பார்க்காதவர்கள் இந்த வாய்ப்பைத் 
தவறவிடவேண்டாம்!


வெள்ளி, 16 செப்டம்பர், 2011

பிரபஞ்சம் ஒரு படைப்பா...? - பேரா.ஸ்டீபன் ஹாகிங்





பேரா.ஸ்டீபன் ஹாகிங்கைப் பற்றிய முந்தையப் பதிவுகள் ...

ஹாக்கிங்... - A Brief History of Mine

டிஸ்கவரி சேனலில் 'Curiosity' என்ற வரிசையில் பல அருமையான அறிவியல் ஆவணப்படங்கள் ஒளிப்பரப்பப்பட்டன. அதிலே முதலாவதாக, பேரா.ஸ்டீபன் ஹாக்கிங் வழங்கிய 'Did God create Universe' என்ற அதிரவைக்கும் காணொளிதான் இன்றையப் பகிர்வு. மனித இனம் சிந்திக்க துவங்கியக் காலத்திலிருந்து, கேட்டப்பட்டுவரும் இந்தக் கேள்விக்கு ஹாக்கிங் தரும் விடை நம்மில் பலரை சிந்திக்கவைக்கும்...சங்கடப்படவைக்கும்...கோபப்படவைக்கும் ...!  எது எப்படி இருந்தாலும் பல விஷயங்களை பலரத்துப் பார்வையில் இருந்து தெரிந்துக் கொள்ளுவதில் தவறில்லை. ஆகவே வாங்க வீடியோவைப் பார்க்கலாம்....

[நண்பர் ரோமாபுரி செல்வராஜ்...! நலமா?] 


யு டியூபில் பார்க்க விரும்புவோர்க்கு....

திங்கள், 12 செப்டம்பர், 2011

ஹாக்கிங்... - A Brief History of Mine


பேரா.ஸ்டீபன் ஹாகிங்கைப் பற்றிய முந்தையப் பதிவு...


2004 ஆம் வருடம் BBC தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்ட காணொளித்தான் இப்போது நாம் காணப்போகும் 'Hawking - The story of the search for the beginning of time'. 

1963, இளம் ஸ்டீபன் ஹாகிங்கின் 21 ஆம் பிறந்த நாளில் துவங்குகிறது இந்தக் கதை. எதிர்க்காலத்தில் அவரின் முதல் மனைவியாகப்போகும் ஜேன் வைல்ட் எனும் இளம் பெண்ணின் நட்பு, முதல் முதலாக அவருக்கு அந்தக் கொடிய இருப்பது கண்டுப்பிடிக்கப்படுவது, தன டாக்டரேட் படிப்பை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கத் துவங்குவது, பெருவெடிப்புக் கொள்கைப் பற்றி தன ஆசிரியரான பிரெட் ஹாயில் அவர்களுடன் கொள்கை மோதலில் ஈடுப்படுவது, ரோஜர் பென்ரோஸின் அறிவுக் கூட்டணி போன்ற நிகழ்வுகளை சுவாரசியமாக, மனதைத்தொடும்விதமாக படமாக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் ராபர்ட் வில்சன் & அர்னோ பென்சியாஸ் என்ற பெருவெடிப்பின் பொது வெளிப்பட்ட நுண் கதிர்களை கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் பேட்டியின் பின்புலத்தில் பிளாஷ் பேக்காக காட்டப்படுவது மிகவும் சிறப்பு! இளம் ஸ்டீபன் ஹாகிங்காக நடித்துள்ள பெனிடிக்ட் கும்பெர்பெட்ச், அவரி மிகவும் அருமையாக சித்தரித்துள்ளார். அவர் மட்டுமல்ல, ஜேன் வைல்டாக லிசா தில்லான், ரோஜெர் பென்ரோசாக டோம் வார்டு போன்ற அனைவரும் கதாப்பாதிரங்களாகவே வாழ்ந்துள்ளனர். இந்தப் படம் அவரை நேசிக்கும் அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை.



நிஜ ஜேன் வைல்ட்.


நிஜ ரோஜெர் பென்ரோஸ் 


நிஜ ராபர்ட் வில்சன் & அர்னோ பென்சியாஸ்

இனி .... ஹாக்கிங்...

செவ்வாய், 14 ஜூலை, 2009

சூரியனின் ரகசியங்கள்.[Updated]

அது ஏனோத் தெரியவில்லை, இதுப் போன்ற பதிவுகளைப் போடத்தான் மனம் விரும்புகிறது. கேலியும், கிண்டலும்,வாழ்த்துக்களும்,வசவுகளும்,( அதுவும் ஒரு ஜாலித்தான்.அதுப்போன்றவைகளுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலரின் பரம ரசிகன் அடியேன் நான்.) நிறைந்த இந்த வலையுலகில், இதுப்போன்ற பதிவுகளுக்கு வரவேற்ப்பு இல்லை என்பது நிதர்சனம். இருந்தாலும் யாரோ ஒருவர் இருவராவது படிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நாம் எல்லோரும் நியூட்டனோ, ஆல்பர்ட் ஐன்ஸ்டைனோ, அல்லது தற்போது வாழும் அறிவுஜீவி ஸ்டீபன் ஹாகிங்க்சோ போல ஆக முடியாது.(முடியுமா?) ஆனால் அவர்களின் அறிவில் ஒரு சிறுத் துளியாவது நாம் பெற முயற்சிக்க வேண்டும். அது போன்ற முயற்சித்தான் இது. பெரியவர்கள் பார்த்தல் மட்டும் போதாது. நம் வீட்டுப் பிள்ளைகளையும் இதுப் போன்றவற்றை பார்க்க ஊக்குவிக்கவேண்டும். என்ன ஒன்று, இதுப்போன்ற அறிவியல் சார்ந்த காணொளிகள் தமிழில் தயாரிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? அதுவரையில் காத்திருக்க வேண்டாம். ஆங்கில மொழியில் பார்ப்பதால் அந்த மொழியறிவையும் வளர்த்துக்கொள்ளலாம்.
வலையுலகில் நல்லது கேட்டது எல்லாம் கொட்டிக்கிடக்கிறது. சில அதில் நல்லவைகள் இருக்கும் இடம் எனக்கு கொஞ்சம் தெரியும். அவைகளை பார்த்து நானும் தெரிந்துக்கொண்டு, உங்களுக்கும் காண்பித்துத் தரும் சிறிய முயற்சி இது. அது உங்களை வந்தடைந்ததா என்று உங்களின் கருத்துக்கள் மூலமாக தெரிந்துக்கொள்வேன். ஆகவே சிரமம் பாராமல் ஏதாவது சொல்லுங்கள்.

சூரியன், நம் சூரியக்குடும்பத்தின் தலைவன். அவனுக்குள் எதனை ஆயிரம் ரகசியங்கள். நம் குடும்பத்தின் தலைவரான நம் தந்தையைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா?

சரி நீங்கள் பார்க்க ஆரம்பியுங்கள். மீண்டும் அடுத்த முறை நம் பிரபஞ்சத்தின் மேலும் பல ரகசியங்களை ஆராய்வோம்.