Milkeyway Galaxy லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Milkeyway Galaxy லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

ஸ்டீபன் ஹாக்கிங், கார்ல் சேகன், ஆர்தர் சி. கிளார்க் - ஒரு அறிவியல் சங்கமம்!






பேரா.ஸ்டீபன் ஹாகிங்கைப் பற்றிய முந்தையப் பதிவுகள் ...

ஹாக்கிங்... - A Brief History of Mine

பிரபஞ்சம் ஒரு படைப்பா...? - பேரா.ஸ்டீபன் ஹாகிங்



மூன்று விஞ்ஞானப் பெருந்தலைகளின் சங்கமம்! பேரா.ஸ்டீபன் ஹாக்கிங், வானவியலாளர்.கார்ல் சேகன், விஞ்ஞான புனைக்கதை எழத்தாளர் ஆர்தர் சி க்ளார்க், இந்த மூவரும் நாம் வாழும் காலத்தில் வாழும்...வாழ்ந்த[தற்போது கார்ல் சேகன் மற்றும் ஆர்தர் சி க்ளார்க் ஆகிய இருவரும் இல்லை] அறிவியல் சிந்தனையாளர்கள். இவர்கள் மூவரையும், பிரிட்டிஷ் செய்தியாளரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான மெக்னுஸ் மேக்னுசன் ஒன்றுப்படுத்தி 'God, the Universe, and Everything Else' என்ற பெயரில், ஆங்கிலத்தில் 'கலோகுயம்' (colloquium ) என்பார்களே,அதுப்போன்ற  அறிவியல் கலந்துரையாடலை ஏற்பாடு செய்து வரலாறுப் படைத்தார். இது நடந்தது 1988 இல்... மார்ஸ் ரோவரோ, ஹப்பிள்  விண்வெளித் தொலைநோக்கியோ விண்ணில் செலுத்தப்படாதக் காலம். ஆனாலும் இந்த மூன்று மேதைகளை ஒரே மேடையில் காண நமக்குக் 
கிடைத்த ஒரே வாய்ப்பு! ஆகவே இதுவரைப் பார்க்காதவர்கள் இந்த வாய்ப்பைத் 
தவறவிடவேண்டாம்!


வியாழன், 10 மார்ச், 2011

மில்கிவே கேலக்ஸி - ஒரு பயணம் ![Updated]


 "நம்ம வலைப்பூவைப் பற்றி தன்னுடைய  'பொன்மாலைப் பொழுதில்' பிரத்தியேகமாக அறிமுகம் செய்து, மாபெரும் ஊக்கம் தந்த கக்கு - மாணிக்கம் அவர்களுக்கும், மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நம் மனமார்ந்த நன்றிகள் ! "          

நாம் இருக்கும் 'Milky way Galaxy' எனப்படும் 'பால்வழி வளிமண்டலம்' பற்றிய ஒரு அட்டகாசமான காணொளியைக்  காண நேர்ந்தது. அதுதான் இன்றையப் பகிர்வு.அதற்கு முன் அதைப் பற்றிய சில தகவல்கள்....

நம்ம சூரியக் குடும்பம் இருக்கும் இந்த கேலக்ஸி, பிரபஞ்சத்தின் 100 பில்லியன் கேலக்ஸிகளில் ஒன்று. அதனுள் நம்ம சூரியனப் போல சிறியதும், மிகப்பெரியதுமாக 100 - 400 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன!

 தட்டை ஸ்ப்ரிங் போல சுருளாக இருக்கும் நம்ம கேலக்ஸி,இந்தக் கடைசியிலிருந்து, அந்தக் கடைசி வரை பயணிக்க ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் ஆகும்! [ஒரு ஒளி ஆண்டு = 9,500,000,000,௦௦௦ கிலோ மீட்டர்கள்!]. 

நிலஒளியோ, செயற்கை ஒளிகளோ இல்லாத மேகமில்லாத  இரவில் நமக்குத் தெரிவது வெறும் 0.000003% பகுதித்தான்! ஒரு சூப்பர் கேமராவில் எடுக்கப்பட்டால் இதுப்போல...




இந்தப் பக்கத்திலும் சென்றுப் பார்க்கலாம்...


நம்ம கேலக்ஸியில் உள்ள நட்சத்திரங்கள், அதன் மையப் பகுதியை வினாடிக்கு  5000 கிமி வேகத்தில் சுற்றி வருகின்றன. இதே வேகத்தில் நம்ம பூமி சூரியனை சுற்றி வந்தால், மூணே நாளில் வளம் வந்து விடும்! அப்ப வருஷத்துக்கு 365 நாட்கள் இல்லை ... மூணே நாள்தான்! அடடா... இப்படி இருந்தால் நாமும் ரொம்ப வருஷம் உயிர் வாழலாம் அல்லவா?!

நம்ம கேலக்ஸியின் பக்கத்து வீடான 'அன்ரோமீடியா' எனப்படும் இன்னொரு 'ஸ்பைரல்' கேலக்ஸி [தூரம்: 2.5 மில்லியன் ஒளி ஆண்டுகள்], நம்ம கேலக்ஸியோடு மோதி விளையாடி கலவை  செய்யும்  மூடில், வினாடிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் நெருங்கிக் கொண்டு வருகிறது! அப்ப நம்ம கதி? இதைக் காண நாம் கண்டிப்பாக இருக்க மாட்டோம். ஏனென்றால் அதற்க்கு இன்னும் சில பில்லியன் ஆண்டுகள் ஆகும். ஏன்... நம்ம சூரிய பகவானே சாகும் தறுவாயில் இருப்பார் என்று கூறப்படுகிறது!
  
நம்ம கேலக்ஸியின் நடு சென்டரில் 'சூப்பர் மேசிவ் ப்ளாக் ஹோல்' (Super massive Black hole) எனப்படும் அதி பயங்கரம் இருப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது! அதன் அளவு 40,00,000 சூரியன்களை ஒத்தது! அவ்வளவு பெரிதாக இருந்துக்கொண்டு, கிடைத்தவைகளை எல்லாம் கபளீகரம் செய்யும் இதனால்  தற்போது நமக்கு ஆபத்து இல்லை. ஏனென்றால் இது இருப்பது 250,000,000,000,000,௦௦௦ கிலோமீட்டர்களுக்கு அப்பால்! மேலும் இந்தக் 'கருங்குழிகளைப்' பற்றி அறிய இங்கே ...   
   
என்னைக் கவர்ந்த ஒரு சிறு விடியோ இதோ.... அனால் விஷயம் ஏராளம் !



" நீங்க எங்க வசிக்கிறீங்க?" என்று யாராவதுக் கேட்டால், "நான் மில்கிவே கேலக்சியில் வசிக்கிறேன் !" என்றக் கூறவேண்டிய கட்டாயம் எதிர்க்காலத்தில் ஒருநாளில் வரத்தான் போகிறது!
அறை,வீடு, தெரு,ஊர்,மாவட்டம்,மாநிலம்,நாடு,கண்டம்,உலகம்,சூரியக் குடும்பம், போன்ற அடையாளங்களை துறக்கவேண்டிய நிர்பந்தம் வந்தால்தான், மனித இனத்திற்கு அன்பு, சமாதானம், ஒற்றுமை போன்ற வார்த்தைகளுக்கு நிஜமான பொருள் விளங்கும். அந்த நாள் வரும்... வரவேண்டும்!    

நன்றி நண்பர்களே, அருமையான காணொளி உங்களின் முன்னே....