தொடர்புடைய பழைய பகிர்வுகள்....
சார்ல்ஸ் டார்வினும் உயிரின மரமும்... தொலைந்துப்போன தொடர்புகள்....
டார்வின் எனும் குடும்பஸ்தன் !
அறிவியலின் கதை[5] : உயிரின் ரகசியம்...
இந்த உலகில் யார் வாழ்வது, யார் இறப்பது,யார் தங்களின் குணாதிசயங்களை அடுத்தத் தலைமுறைக்கு பரிமாறுவது என்பதை பரிணாமமேத் தீர்மானிக்கிறது. ஆனாலும் இந்தக் கொள்கையே பலராலும் கவனிக்கப்படாததும், புறந்தள்ளப்படுவதும், சரியாகப் புரிந்துக்கொள்ளப்படாததுமாததாக இருக்கிறது.
இந்த 'நோவா' வின் 'பரிணாமம்'[Nova's Evolution'] என்ற தொடர்க் காணொளி நம்மை உலகம் முழுவதும் அழைத்துச் சென்று பரிணாம அறிவியலை பரிசோதித்து, அதன் ஆழ்ந்த தாக்கம் நம் சமுதாயத்தின் மேலும் பண்பாட்டின் எவ்வாறு உள்ளது என்பதை விளக்கப்போகிறது. சார்லஸ் டார்வினின் மேதமையிலும், வேதனையிலும் தொடக்கி, அந்த அறிவியல் புரட்சி எவ்வாறு உயிரின மரத்தை உருவாக்கியத்து என்றும், பாலுணர்வின் ஆற்றல் எவ்வாறு பரிணாம வளர்ச்சியை உந்தித்தள்ளியது என்றும், எப்படி மொத்த இன அழிவுகள் புதிய உயிரினங்களின் தோற்றத்திற்கு வழிவகுத்தது என்பதையும் அழகாகக் காட்டியுள்ளது.
அதுமட்டுமல்லாது மனிதனின் தோற்றம், அவனது சவால்களும் வெற்றியும், அற்றும் அறிவியலுக்கும் மதத்துக்கும் நடுவே மூண்ட போராட்டத்தைப் பற்றியும் கூறுகிறது.
இந்தத் தொடரின் நோக்கமே பரிணாமத்தைப் புரிந்துக்கொள்ளவும் அது எப்படி நடைப்பெறுகிறது மற்றும் அது எவ்வாறு நமது வாழ்க்கைக்கு சம்மந்தப்பட்டுள்ளது என்பதை விளக்குவதுமே. அதில் அவர்கள் வெற்றிப் பெற்றுள்ளார்கள் என்றேக்கூறவேண்டும். மொத்தத்தில் அறிவை வளைக்கும் அருமையானத் தொடர்க் காணொளிகள்! . வாங்கப் பார்க்கலாம்.....!
1.Darwins Dangerous Idea - டார்வினின் அபாயகரமான ஐடியா!
சார்லஸ் டார்வின், தன் பரிணாமக் கொள்கையை, சில நண்பர்களைத்தவிர இருபத்தியொரு வருடங்களாக ரகசியமாக வைத்திருந்தார். ஒருமுறை அதைப்பற்றிக் கூறும்போது ' ஒரு கொலையை ஒப்புக்கொள்ளுவது போல உள்ளது' என்றார். அவரின் மனவேதனை இன்றும் நம் சமுதாயத்தில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது! இந்தக் கானொளியில் அவரின் வாழ்வில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளையும், அவரின் வாழ்வுக்காலத்தைவிட தற்காலத்தில், பரிணாமக் கொள்கை ஏன் முக்கியமானதாகப்படுகிறது என்பதையும், இந்த பூமியிலுள்ள உயிரினங்களின் கடந்தக்காலத்தையும், எதிர்க்காலத்தையும் கணிக்க அறிவியலுக்கு ஒரு முக்கியக் கருவியாக உள்ளது என்பதையும் பார்க்கலாம்.
====================================
Extinction! இனப்பெரழிவு
பூமியில் இதுவரை ஐந்து முறை இனப்பெரழிவு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பூவுலகின் மீது வாழ்ந்த 99.9 சதவிகித உயிரினங்கள் தற்போது அழிந்து விட்டதாகவும் கருதப்படுகிறது! அடித்த ஆறாவது அழிவுக்கு நாம்தான் ஏற்பாடு செய்துக்கொண்டு இருக்கிறோமா?
====================================
The Evolutionary Arms Race - Survival of the fittest. (தகவுடையது தப்பிப் பிழைக்கும்!)
வலியது வாழும் (அ) தகவுடையது வாழும்[நன்றி-கையேடு இரஞ்சித்] (அ) தகவுடையது தப்பிப் பிழைக்கும்! இது ஒரு ஈவிரக்கமில்லாத போட்டியா...? அல்லது தீவிர ஒத்துழைப்பா...? இரண்டுமே சரிஎன்றுச் சொல்லலாம்! இனங்களுக்கு இடையே உள்ள இந்த இடைவினை மற்றும் பரிமாற்றம், பரிணாம அறிவியலில் உள்ள மிகப்பெரிய உந்துதல் சக்தியாகும். இதைப் புரிந்துக்கொள்வதே நம்முடைய வாழ்வாதாரமாகும்!
====================================
Why Sex?- பாலியல் உறவு எதற்காக?
பாலியல் உறவு அல்லாது பாலுணர்வு, பரிணாம அறிவியலில் உயிரைவிட முக்கியமானது! அதுவே மரபணுக்களில் வித்தியாசங்களை ஏற்ப்படுத்தி பரிணாமம் தன மேற்ப்படிகளில் ஏற எரிப்பொருளாக விளங்குகிறது.
The Minds Big Bang - மனதின் பெருவெடிப்பு!
ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு! தற்கால நவநாகரீக மனித மனம் அன்று ஏற்பட்ட ஆக்கப்பூர்வமான தொழில்நுட்பப மற்றும் சமூக எழுச்சியாலேயாகும்!
==================================
What About God? - அப்படீன்னா கடவுள்...?
இருக்கிற எல்லா உயிரினங்களிலும் மனிதன் மட்டுமே தன பூர்வீகத்தைப்பற்றி அரைத்துக்கொண்டு இருக்கிறான். இந்தக் கடைசி காணொளி மதத்துக்கும் அறிவியலுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தைப் பற்றிக் காண்பிக்கிறது!